அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம் இன்று ஒரு கசப்பான...
அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம்
இன்று ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இத்தளத்தில் நான் இணைந்த ஆரம்பத்தில் அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த 'மனம் பறி போனது' எனும் தலைப்பிலான கவிதை இன்றைய வாரமஞ்சரி பத்திரிகையில் 'விட்டுச் சென்ற அவள்' என்ற தலைப்பு மாற்றத்தின் கீழ் என்னுடைய கவிதை 'கஜபா தஸ்கீன்' என்ற முகமறியா ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தது. இதனை நான் எப்படி எடுத்துக் கொள்வது தோழர்களே ! நீங்களே சொல்லுங்கள். கண்கள் விழித்து எழுதுபவன் ஒருத்தன் நோகாமல் சொந்தம் கொள்ள பல பட்டாளங்கள் எமக்கு பின்னால் உலவுகிறது. எழுதுபவனுக்கு அவனது எழுத்துக்கள் உரிமையில்லாத காப்புரிமை இத்தளத்தில் இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது. இது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன சொல்லுங்கள் ஆராய்வோம்.