எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பொதுவாக நாட்டு...

நான் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பொதுவாக நாட்டு நடப்புகளை பற்றி உரையாடல் சென்று கொண்டிருந்த போது அரசியல் பற்றியும் அலசினோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு கொள்கை உடைய இரு துருவங்கள். ஆகவே எங்களுக்குள் கருத்து மோதல்கள் வருவது வழக்கம்தான். பழகிவிட்டது. சிறிது நேரம் கழித்து எங்கள் பேச்சு முகநூல் பக்கம் திரும்பியது. 
அவர் கவிதை எழுதுகின்றவர் இல்லை எனிலும் படிக்கும் பழக்கம் உண்டு. எனது கவிதைகள் பலவற்றை படித்து கருத்துக்களும் பகிர்ந்துள்ளார். அதேபோல குறைகளையும் சுட்டிக்காட்டி உள்ளார்.அப்போது அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார். ஏன் உன்னுடைய கவிதைகள் பெரும்பாலும் சமுதாய தொடர்பு உள்ள சிந்தனை கள் மற்றும் சமுயாயத்தை சாடுவதாகவும் அமைகிறது. இது நீ தெரிந்து செய்வதா அல்லது உன்னையறியாமல் நிகழ்வதா என்று மிகவும் ஆர்வமாக வினவினார். நான் உடனடியாக பதில் அளித்தேன்.


 நிச்சயம் அறிந்தும் புரிந்தும் தான் எழுதுகிறேன் என்றேன். காரணம் என் மனம் சமுதாயம் மற்றும் வருங்கால தலைமுறை பற்றியும் தான் அதிகம் கவலைப்படுகிறது. 

இன்னும் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படாமல் சீரழியும் நிகழ்வுகள் தானே அதிகம் நடைபெறுகின்றன. அதான் பகுத்தறிவு பாதையில் பயணமும் சிந்தனையும் செல்கிறது. தவறில்லை என்று நினைக்கிறேன். ஏன் உனக்கு இது பிடிக்கவில்லையா என்று எதிர் கேள்வி எழுப்பினேன். 
உடனே அவன் சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்றுமில்லை. பாராட்டுக்குரியது தான். கவிஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் சிந்தனையும் எழுத்தும் அமைகிறது.அவன் மேலும் அப்படி என்றால் உன்னை # " சமுதாய கவிஞர் " என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். பொருத்தமாக இருக்கும் என்றார். 

நான் அப்படி நினைக்கவில்லை , சமுதாயத்தில் நானும் ஒரு கவிஞனாக பலராலும் அழைக்கப்படுகிறேன். அவ்வளவுதான் என்றேன். எனது விருப்பம் சமுதாயம் மாற்றம் பெறவும் மறுமலர்ச்சி அடையவும் இளைய தலைமுறையினர் பகுத்தறிவுடன் பல உண்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதும் அவர்கள் வளமான வாழ்க்கையும் சீர்திருத்தமடைந்த சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 

அதற்காக நான் எனது இறுதி மூச்சு வரை என்னால் முடிந்த அளவுக்கு தொடர்ந்து எழுதுவேன். இது உறுதி.நான் இப்படி பேசியதும் நண்பர் சற்று உணர்ச்சிவசப்பட்டு எனது கையை பிடித்து கொண்டு எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உனது வித்தியாசமான பார்வை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நீ உன் பாதையில் சென்று உனது இலக்கை அடைய வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்என்றார்.இதை நான் இங்கே குறிப்பிட்டது பதிவிட்ட காரணம் என் நண்பரை போலவே சிலருக்கு என்னைப் பற்றி இதுபோன்ற எண்ணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இந்த பதிவு என்னிலை பற்றி தன்னிலை விளக்கமாக அமைந்திடும் என்பதற்காக தான்.

எனக்கு எனது கவிதைகளால் பேரும் புகழும் கிடைப்பதை விட எனது காலத்தில் உள்ள இந்த சாதிமத வெறியும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடும் வறுமையின் உச்சத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் நிலையும் முழுமையாக மாறி ஒரு புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது எனது ஆழ்மனதின் விழைவாகும். இதன் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பியதால் உங்களிடம் இதனை பகிர்ந்து கொள்கிறேன்.

வணக்கம்

பழனி குமார் 
07.10.2017  

நாள் : 7-Oct-17, 6:45 am

மேலே