எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 37 ********************************** நாங்கள் கடந்து...

  அனுபவத்தின் குரல் - 37 
**********************************


நாங்கள் கடந்து வந்த பள்ளிப் பருவமும் , இளமைக் காலமும் தற்போதுள்ள அவ்விரண்டு காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் உள்ளதை அறியலாம் .இந்த அளவீடு அந்ததந்தக் காலத்து கல்விமுறை , பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் , பல்வேறு துறைகளும் அதன் சம்பந்தப்பட்ட பட்டங்கள் ,தொழில்முறைக் கல்வி பிரிவுகள் மற்றும் அதற்கேற்ற அடிப்படை அமைப்பு வசதிகளை வைத்து கூறுகின்ற கருத்து இது . தவிர வேறு 
எந்த மாற்று வழியிலும் ஒப்பிடவில்லை .

நிலைமை இவ்வாறிருக்க முக்கியக் காரணம் அனைத்து மாணவருக்கும் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி, சாதிமதங்கள் ,சாமானியர் உயர்ந்தவர் என்ற வேறுபாடின்றி " கல்விமுறை " மற்றும் " கல்விக்கூடங்கள் " ஆகிய இரண்டும் சமநிலையில் ஒன்றாக இல்லாமல் மாறுபட்டு பற்பல பிரிவுகளாக இருப்பதும் பாடதித்திட்டங்கள் சமச்சீராக இல்லாமல் தடம் புரண்டு இருப்பதும் தான் .அதற்கு அடிப்படைக் காரணம் கல்வித்துறை , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது மாறி  அந்தந்த மாநில கல்வித் துறையின் கீழ் வர வேண்டும். சமுதாயத்தில் அனைவரும் ஒரே கல்வி முறையை கற்பதற்கு வழிவகை வகுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் .

அப்போதுதான் கிராமத்து குழ்நதைகளும் அனைத்து வசதியுமுள்ள நகரத்து குழந்தைகளும் இணைந்தது ஆரம்பத்தில் இருந்தே ஒரே கல்வியை , ஒரே மாதிரி பாடதிட்டம் கடைபிடிக்கும் கல்வி நிலையங்களில் சேர்ந்து படித்து முன்னேற முடியும் .அதுமட்டுமன்றி வசதி உள்ளவர்களும் கொடையாளிகளும் வாரி வழங்கி இல்லாத ஏழை எளியோர் குடும்பத்தில் உள்ள மாணவ செல்வங்களுக்கு இயன்றளவு உதவிகள் செய்து படிக்க வைக்க வேண்டும் . மேலும் அரசாங்கமும் உதவிகள் செய்து இளைய சமுதாயத்தை ல்வியறிவில் கலங்கரை விளக்குகளாக மாற்றிடல் வேண்டும் . அதனால் தமிழ்நாட்டிற்குப் பெருமை கிடைக்கும் ..


பழனி குமார்  

நாள் : 28-Nov-17, 10:28 pm

மேலே