எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்………. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே...

 தமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்………. 

  
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை ஐந்து வகையாக பிரித்துவிட்டார்கள். 

கண்களுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளி நிலத்தையும் அந்த நிலத்தை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரமும் இருந்தால் அந்த பரந்த சமவெளி நிலத்தை மருத நிலம் என்றார்கள்.

கண்களுக்கு எட்டிய தூரம் சுற்றி சூழ்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும் அந்த மலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரம் இருந்தால் அந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றார்கள்.

இப்படியே மலை பிரதேசத்தை ஒட்டியிருக்கும் நிலத்தை முல்லை நிலம் என்றார்கள்.

பரந்து விரிந்த கடலையும் தங்களுடைய வாழ்வாதாரம் கடலை நம்பியிருப்பதால் அதை நெய்தல் நிலம் என்றார்கள்.

கோடை காலத்தில் முல்லை நிலம் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.

அப்படியே இந்த ஐந்துவகை நிலங்களுக்கும் தனித் தனியே கடவுளர்கள் உண்டு.

குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. “சேயோன் மேய மைவரை உலகமும்” எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
குறிஞ்சி  நிலத்தின் கருப்பொருட்கள்தெய்வம்: முருகன்மக்கள்: குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சிமரங்கள்: வேங்கை, அகில், சந்தனம், மூங்கில்விலங்குகள்: குரங்கு, கரடிபறவை : கிளி, மயில்பறை : தொண்டகம், வெறியாட்டுபண்: குறிஞ்சி யாழ்மலர்கள்: குறிஞ்சி, காந்தள்தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்நீர் நிலை : அருவி, சுனை 

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை     மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. ” மாயோன் மேய காடுறை உலகமும்” எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்தெய்வம்: திருமால்மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்உணவு: வரகு, சாமைபறவைகள்: காட்டுக் கோழிவிலங்குகள்: மான், முயல், பசு, மரைநீர் நிலை : காட்டாறுமரங்கள்: கொய்யா, காயா, குருத்துமலர்கள்: முல்லை, பிடா,தொன்றிபண்: பறை, முல்லை யாழ்பறை : ஏறுகோள்தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல்ஊர்: பாடி,சேரி

மருதம், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.மருத நிலத்தின் கருப்பொருட்கள்தெய்வம்: இந்திரன்மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்பறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்விலங்குகள்: எருமை, நீர்நாய்மலர்கள்: தாமரை, கழுநீர், குவளைமரங்கள்: காஞ்சி, மருதம்உணவு: செந்நெல், வெண்நெல்பண்: மருத யாழ்பறை : நெல்லரிதொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்நீர் நிலை : பொய்கை, ஆறு

நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். “வருணன் மேய பெருமணல் உலகமும்” எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது. நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்தெய்வம்: வருணன்மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்பறவைகள்: கடற்காகம்விலங்குகள்: சுறாமரங்கள்: கண்டல், புன்னை, ஞாழல்மலர்கள்: நெய்தல், தாழை, கடம்புபண்: மீன்கோட் பறை, விளரி யாழ்தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்உணவு : மீன்நீர் நிலை : கேணி, கடல்     

பாலை என்பது  பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.பாலை நிலத்தின் கருப்பொருட்கள்தெய்வம்: கொற்றவைமக்கள்: விடலை, காளை, மறவர், மறத்தியர்பறவைகள்: பருந்து, கழுகுமரங்கள்: உழிஞ, பாலை, இருப்பைமலர்கள்: மராம்புபண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்பறை : ஆறலை, சூறைகோள்தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்நீர்: கிணறுவிலங்கு: வலியிலந்த புலியாழ்: பாலையாழ்ஊர்: குறும்பு 

இப்படி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழர்களின் தெய்வமாக           வழிபாட்டு வந்துள்ளனர். இவை சங்க கால இலக்கியங்களிலும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய ஹிந்து மத எதிர்ப்பாளர்களான வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் தமிழன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தமிழர்களின் பண்பாட்டை சிதைக்க முயலுகின்றனர். இவர்களின் உருவாக்கம் தான் திராவிடக் கட்சிகளும் ராமசாமி நாயக்கரும். ஆகவே போலியான தமிழ் பேசுவோரை புறம் தள்ளி ஒதுக்க வேண்டும்.  

பதிவு : ரவிந்தரன்
நாள் : 29-Nov-17, 5:59 am

மேலே