எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்...

பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச் சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின் தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:
எந்தையாகிய சிவ பெருமானே, பாலிலே பெய்து பிசைந்த சோறு என்று சொன்னால் விரைந்து சென்று ஆர்வமுடன் பெரியதொரு சால் போன்ற வயிற்றில் திணிப்பதற்குத் தடுத்தலில்லாத யான் தக்க வாழை, பலா, மா முதலிய பழத்தை யுண்ணுமிடத்து அவற்றின் தோலென்றாலும் சிறிதளவேனும் கிள்ளிச் சூழவுள்ளவர்க்குத் தர நினைக்கமாட்டேன்; எனக்கு வால் இல்லையேயொழிய இருந்தால் வனங்களில் வாழும் தகுதியுடையேனாதலால் யான் யாது செய்வேன்?.

வள்ளலார்

நாள் : 30-Nov-17, 9:00 pm

மேலே