எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 39 ********************************** ஒருவர் ஒரு...

  அனுபவத்தின் குரல் - 39 
**********************************


ஒருவர் ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைத்தால் திட்டமிட்டு செய்தல் மிகவும் அவசியம். அதுமட்டுமல்ல அதை சோம்பல் காரணமாகவோ , ஏதோ ஒரு சந்தேகத்தின் பொருட்டோ அல்லது தடுமாற்றம் காரணமாகவோ ,அந்த காரியத்தை நாளை பார்க்கலாம் என்று தள்ளிப் போட கூடாது. நாளை என்பது வேறு சில காரணங்களால் மீண்டும் தானாகவே தள்ளிப் போக நேரிடும். நாம் ஒன்றும் செய்ய முடியாது. நாளை என்பது நிச்சயம் இல்லை .மேலும் அந்த காரியத்தை தள்ளிப் போடுவதால் சிலவேளைகளில் நமக்கு பொருளும் நேரமும் நட்டமாவது மற்றுமல்லாமல் எதிர்மறையான முடிவுகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. எதையும் நாம் தீர்மானிக்க முடியாது .அனுமானிக்க மட்டுமே முடியும் .

அப்படி தள்ளிப் போடுவதால் நன்மை ஏற்படுமா என்று சுயமாக சிந்திக்க வேண்டும் அனைத்துக் கோணங்களிலும் . தீர்மானிப்பது நாமாகவே இருப்பினும் முடிவின் முடிவை முழுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும் அதனால் மற்றவர்கள் பாதிப்படைய கூடாது என்று நினைக்க வேண்டும் .தவறை நம்மீது வைத்திருக்கும் போது அடுத்தவரை குறை கூறுவது முற்றிலும் மாறிட வேண்டும். இதற்காகத்தான் அடிக்கடி நமது செயல்களை சுயபரிசோதனை செய்து திருத்திக் கொள்ள வேண்டும் . அடுத்தவர் சுட்டிக்காட்டி நாம் திருந்துவதாக ஒருபோதும் இருத்தல் கூடாது .இதற்காக நாம் அடுத்தவரிடம் கலந்து பேசுவதில் தவறில்லை.கௌரவம் பார்க்கக் கூடாது .

அதே நேரத்தில் தன்மானமும் , சுயமரியாதையையும் ,இழத்தல் கூடாது . பகுத்தறிவுடன் சிந்தனை தேவை என்பது வலியுறுத்துவதும் அதன் அடைப்படையில் தான் . அதேபோல அடுத்தவர் விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதும் கொள்கைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் . அவரவர் மனம் , சிந்தனை ,நம்பிக்கை என்பது யாவும் அவரவருக்கே சொந்தம் .

இன்றும் என்றும் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் .


பழனி குமார்  

நாள் : 1-Dec-17, 8:14 am

மேலே