எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 50 -------------------------------------- -------------------------------------- நாம்...

  அனுபவத்தின் குரல் - 50
--------------------------------------
--------------------------------------


நாம் வாழும் காலத்தில், நான் ஏன் பிறந்தேன் , எதற்காக வாழ்கிறோம் என்று சில நேரங்களில் சிந்திக்கும் பலரும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் மூத்தோர்கள் , வயதில் முதிர்ந்து நடையும் தளர்ந்து மனதும் உடைந்து பேசுகிறவர்கள் இதுதான் அதிகம் இருக்கும் . இன்னும் சிலர் வறுமை காரணமாக , சந்தர்ப்ப சூழ்நிலையால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் , வாழ்வில் பல விதத்திலும் தோல்வி அடைந்தவர்கள் விரக்தியுடன் கூறுகின்ற வார்த்தைகள் தான் இவை . அது அவர்களின் தவறில்லை . மகிழ்கின்ற நேரங்களில் அனைத்தையும் மறந்து ஆனந்தமாய் கொண்டாடுவதும் , துயரம் நேரிடும் பொழுதுகளில் வருத்தம் வழிந்திட மனதிற்குள் அழுவதும் மனிதன் வாழ்க்கையில் இயல்பு தான் இயற்கை நிகழ்வுகள் மற்றும் தோன்றிடும் உணர்வுகள் தான் . வாழ்வியல் எனும் நூலில் இதுவும் படிக்க வேண்டிய பக்ககங்கள் தான் .

வாழ்வின் இறுதி அத்தியாயத்தில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டியது ...நாம் என்ன செய்தோம் இதுவரை ..என்னென்ன சாதித்தோம் என்பதை யோசிக்க வேண்டும் .எவ்வளவுதான் பணம் கட்டுக்கட்டாக சம்பாதித்து வைத்தும் , அடுக்கு மாடி வீடுகளை பெற்றிருந்தாலும் , நாம் அவைகளை விட்டுத்தான் செல்ல வேண்டும் . எதுவும் நம் கூட வரப்போவதில்லை . நீ உனக்காக சம்பாதித்து அடுத்தவர்க்கு விட்டு செல்கிறாய் . அதனால் சமுதாயத்திற்கு என்ன பயன் ..சமூகம் உன்னை எத்தனை நாட்கள் நினைவில் வைத்திருப்பர் ..காலம் தேயத்தேய மனிதனின் நினைவுகள் தேய்ந்திடும் . ஒரு காலத்தில் அழிந்துவிடும் .

ஆகவே உள்ளவரை சமூகத்திற்கும், அடித்தட்டு மக்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும், நம்மை நாடி வருபவர்களுக்கும், ஆதரவின்றி தவிக்கும் பல உள்ளங்களுக்கும் நம்மால் முடிந்தவரை உதவிகள் செய்திடல் வேண்டும் . உங்கள் குடும்பம் அல்லது உன்னை சுற்றி இருந்தவர்கள் மறந்தாலும் , உன்னால் பலனடைந்தவர்கள் , வாழ்வுப் பெற்றவர்கள் நிச்சயம் நினைத்திடுவர் . வாழ்த்திடுவர் உனக்குப் பின்னாலும் . அதைவிட நமக்கு வேறன்ன வேண்டும் . 

நமக்காக மட்டுமே என்று வாழாமல் பிறருக்கும் வாழ்ந்திட , வாழும் மனிதனே உண்மையானவன் . மனிதராக பிறந்ததற்கும் ஒரு அர்த்தம் உண்டு .


உதாரணத்திற்கு பெண்களுக்கு சம உரிமைக்காக , சாதிமத ஒழிப்பிற்காக போராடிய தந்தை பெரியாரையும் , பாமரனும் கல்வி கற்க வசதிகள் செய்த பெருந்தலைவர் காமராஜரையும் கட்சி பேதமின்றி அனைவரும் இன்றும் வாழ்த்துவதும் அவர்கள் நினைவைப் போற்றுவதும் அதனால்தான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திடல் வேண்டும் .


பழனி குமார்  

நாள் : 16-Dec-17, 1:44 pm

மேலே