எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

💘மலரே! நீ என்னை வெறுத்ததேனோ!💘 "கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில்...

💘மலரே! நீ என்னை 
    வெறுத்ததேனோ!💘

"கருவறைக்கும் கல்லறைக்கும்
 இடையில் நாடும்
 இன்பமும் இல்லறமும்
 தொலைத்து - காதலில் கூடும்
 அன்பையும் உறவையும்
 இழந்து - வீதயில் வாடும்
 மொட்டு பூவாய் இதயம் 
 சொட்டாய் உதிர்வதேனோ!"💘

"மனம் நீ வெறுத்த
 காரணம் கேட்டு 
 தினம் தீ படர்ந்தும்
 ஜீரணம் இன்றி 
 புலம்புவதேனோ!"💗

"புராணம் வியக்கும் காதலராய்
 தோரணம் மயங்கும் மணமனமாய்
 வாரணம் கடந்து வாழ்வோமென
 நெஞ்சில் சுமந்த ஆசைகள்

 பிராணம் போகும் முன் 
 பூரணம் ஆகாதோ!"💔💘💔

                             💘R💔B💘

பதிவு : ரமேஷ் RB
நாள் : 24-Feb-18, 12:58 am

மேலே