எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஞானி செயலட்சுமி வேம்புசாமிற்கு செங்கல்பட்டி லுதித்து, சாமானியனின் நகலாய்...

ஞானி


செயலட்சுமி வேம்புசாமிற்கு
செங்கல்பட்டி லுதித்து,
சாமானியனின் நகலாய்
சேகரனென் றழைக்க,
பதின்பருவ மூப்படுத்து
பணியினிலே ஆர்வமுற்று,
தந்தையின் தடம்தொடரி
தானு மெழுத்திலிறங்கையில்,
கால வோட்டத்தில்
கண்ணானோரின் கண்ணசைவினிலே,
கலாச்சார கலப்பின்றி
கைப்பூட்டி மணமுடிய,
மனதோடு முறிந்திடா
மணமுறி வாட்கொள்ள,
தன்மானம் தடுத்திடா
தனியொரு கருத்துற்று,
சார்பின் றுரைக்கையிலே
சமரசமிலா சான்றோனெனவறிய,
அரசியலி லழுக்கானோரை
அப்பட்டமாய் வெளுத்திட்டு,
நாடகத்தின் நாயகனாய்
நாற்திசையும் படர்ந்து,
எழுத்துகளை கொக்கிகளாக்கி
எண்ணுபவனை வீழ்த்திட்டு,
ஊடகத்தி லூடுருவி
ஊரெங்கு முலாவி,
தீம்தரிகி டென்றெழுதி
திசையெங்கும் தீத்தெளித்து,
அகில மடக்க
அச்சிபிரதிகளடங்கா தென்றெண்ணி,
இளந்தலைமுறை அடிமையுண்ட
இணையத்தி லெழுதிட,
முப்பத்து பயணத்தில்
முத்தலைகளையு மயக்கிய,
ஞாலத்தின் வீதினிலே
ஞானியாய் நீ - ஞானி....    

- மலரனு           

பதிவு : மலரனு
நாள் : 3-Apr-18, 9:08 pm

மேலே