எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல...

இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளில் நடுவிலே,

ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி #தமிழ் மொழியைஅதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது...

இந்த தொலைக் காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த, பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை #அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்...

இவர்களின் தமிழ் சொல்லாடல் நம்மை வியக்க வைக்கிறது. ஒளிக் கோபுரம், சதுப்பு நிலங்கள், தாழ் நிலங்கள் , அகழ்வு உந்து , சம ஈர்ப்பு விசைகள், மின் ஆற்றல்கள், என பல அருமையான தமிழ் #மொழி பெயர்ப்புகள்...

ஆங்கிலமும் தமிழும் கலந்து கலந்து நம்மை எரிச்சல் உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நடுவில் இந்த அலைவரிசை நமக்கு தேனமுது .

இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு நம் குழந்தைகள் , குடும்பத்தினர் அனைவரையும் இந்த தொலைக்காட்சியை பார்க்கச் செய்து அறிவியலையும் தமிழையும் ஒருங்கே கற்போம், கற்பிப்போம்...

See more--->
Interesting thinks tamilan - https://www.facebook.com/pages/Interesting-thinks-tamilan/205474769639175

நாள் : 13-Apr-14, 8:24 am

மேலே