எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண் இனத்தை இழிக்கும் தீய செயலை செய்யும் நியாய...

பெண் இனத்தை
இழிக்கும் தீய செயலை செய்யும்  
நியாய படுத்தும் மிருகங்களே
கன்னிப்பெண்ணின் மனசை திண்ணும் 
பிணம் திண்ணி கழுகுகளே

வாசமிகுந்த வண்ண மலர்களை 
அரும்புவிட்ட சின்ன மொட்டுக்களை 
காமத்தீயால் கொழுத்தும்
காம பிணம் திண்ணிகளே

உனக்கும் தாய் இருக்கலாம் 
உனக்கும் தமக்கை இருக்கலாம் 
உனக்கும் தங்கை இருக்கலாம் 
உனக்கு பெண் பிள்ளை இருக்கலாம் 

ஏண்டா உனக்கு இப்படி ஓரு 
ஆசை 

பெண்ணை, பெண்ணை மதித்தியுங்கள்
தெய்வமாய், தாயாய் நினையிங்கள்
வாழ்ந்தால் மட்டுமே அவள் வாழ 
முடியும், அவள் வாழ்ந்தால்தான் 
உலகுய்யும்

பெண்ணைக் காப்போம், கற்பழிப்பை 
அறவே ஒழிப்போம் கற்பழிப்பு 
கொலைக்கு சமம்

நாள் : 31-Jul-18, 9:39 pm

மேலே