வீடு வரை உறவு, வீதி வரை மனைவி காடு...
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
பட்டினத்தார் பாடல் புரியாதவர்களுக்கும் புரியும் வகையில், 12 வார்த்தைகளைக் கொண்டு வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ.. என்ற சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன். தமிழ்ப் பாடல்கள், தமிழ்க் கவிதை, சங்ககாலக் கவிதைகள், அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.