நீரின்றி அமையாது உலகு நீ அதை நிரந்தரமாய் நம்பு...
நீரின்றி அமையாது உலகு
நீ அதை நிரந்தரமாய் நம்பு
நீர் என்பது இயற்கையின் சொத்து
உயிரெல்லாம் அதன் வித்து
நீ நிறைந்தாள் இவுலகம் குளிரும்
நீ மறைந்தால் இவுலகம் அழியும்
பசுமையின் விலாசம் நீதான்
பாசன வாய்க்காலில் ஓடுவதும் நீதான்
இயைற்கையின் ராணி நீ
எங்கள் உயிர் நாடி நீ
நீ அமைதியாய் ஓடினால் ஆறு
ஆர்பரித்தால் வெள்ளம்
உன்னால் இது உலகம்
நீ இல்லையெனில் நெருப்பு கோளம்