எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வடகரை வேலன் குற்றாலத்தில் பிறந்தேன் பழநியில் வளர்ந்து கோவையில்...


 வடகரை வேலன்

குற்றாலத்தில் பிறந்தேன் 


  பழநியில் வளர்ந்து கோவையில் வாழ்ந்தேன்  . 

வாழ்க்கையின் மேடுபள்ளங்களில் பயனித்ததினூடாக மனிதர்களிடமும் இருக்கும் பள்ள மேடுகளைப் படித்திருக்கிறேன்/படித்துக் கொண்டேன் 

Happiness is when you realize, your children have turned out to be good people.  Happy Parenting.

 வடகரை வேலன்

--------------------------------------------------------------------------============================================================
அஞ்சலி வடகரை வேலன்

விஷ்ணுபுரம் நண்பர்களில் ஒருவரும் ஆரம்பகாலம் முதல் விருதுவிழாக்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்றவருமான நண்பர் வடகரை வேலன் இன்று மதியம் காலமானார். சென்ற ஒருமாத காலமாகவே நோயுற்றிருந்தார். இதயம், நுரையீரல் சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துகொண்டிருந்தது. 

இலக்கிய ஆர்வம் கொண்டவர். தமிழில் நெடுங்காலமாகவே வலைப்பூ எழுதி வந்தவர்களில் ஒருவர். அனைவருக்கும் நெருக்கமான இனிய நண்பர். இத்தருணத்தில் அவருடன் பேசி சிரித்திருந்த நல்ல தருணங்கள் நினைவில் நிறைந்திருக்கின்றன

 
நண்பருக்கு அஞ்சலி

ஜெ 
மின்னஞ்சல் 

நாள் : 31-Oct-18, 6:51 pm

மேலே