எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 14 ---------------------------​----------- ஒரு காலத்தில் தமிழ்நாட்டில்...

  வாழ்க்கைப் பாடம் 14
---------------------------​-----------


ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் கலைக் கல்லூரிகளும் ,பொறியியல் கல்லூரிகளும் மிகவும் குறைந்த அளவில்தான் இருந்தன . அதிலும் அரசாங்கத்தைச் சார்ந்தது இல்லாமல் , சில தனியார் கல்லூரிகளும் ஓரிரு பல்கலைக்கழகங்களும் மட்டுமே இருந்தன . இதனை இன்றைய தலைமுறை அறியுமா என்று தெரியவில்லை . ஆகவே மாணவ சமுதாயம் அந்தக்காலத்தில் தங்கள் விருப்பப்படி ஒரு கல்லூரியில் சேரவும் முடியவில்லை விரும்புகின்ற பாடம் கிடைத்து படிக்கவும் இயலவில்லை . அன்றைய மக்கள் தொகைக்கு நிகராக பார்க்கும்போது அதுவே மிகவும் கடினமாக இருந்தது கல்லூரி படிப்பு என்பது ,பலருக்கு கனவாகவும் ஆகிவிட்டது .ஆனால் இந்த காலகட்டத்தில் அரசு சார்பு கல்வி நிறுவனங்களைவிட , தனியார் பல்கலைக்கழகங்களும் ,கலை மற்றும் பொறியியற் கல்லூரிகளும் அதிகமாகவே உள்ளன . அதிலும் சில தன்னாட்சி சுதந்திரம் கொண்ட கல்வி நிறுவனங்கள் பலவும் உள்ளன . ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் அப்போதும் இப்போதும் ஏழை சமுதாயம் என்ற ஒன்று நிலையாக இருக்கத்தான் செய்கிறது .அதை எவரும் மறுக்க முடியாது . 

வசதி உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் பள்ளிக்கல்வி முதலே கல்லூரி கல்வி வரை அவர்களால் விரும்புவதை தேர்வு செய்து " எப்படியோ " பெற்றுவிடுகிறாரக்ள் .ஆனால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் நிலைதான் மாறவே இல்லை . அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த மாணவர்கள் ஏழை குடும்பங்களில் இருப்பினும் அவர்களின் கனவும் எண்ணமும் நோக்கமும் கானல் நீராக ஆகிவிடுகிறது . இன்னும் மோசம் தற்போது நுழைந்திருக்கும் " நீட் " தேர்வு போன்றவை கிராமப்புற மக்களை ஒதுக்கி வைக்கிறது . இதில் அரசியல் தலையீடும் உருவாகி மேலும் மாணவர்களை நிலைகுலைய வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை .

ஆகவே , நான் மாணவ சமுதாயத்திற்கு , ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் . அறிவு ஆற்றலுடன் முடிந்தவரை உங்களை தயார்செய்து கொள்ளுங்கள் அடுத்த நிலைக்கு சென்றிட , மேல் படிப்பு படித்திட .உங்களால் எந்த அளவு முயற்சி செய்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுங்கள் , இல்லையெனில் அதற்காக மனம் தளராதீர்கள் , தவறான முடிவைத் தவிர்த்திடுங்கள் . மற்றவரிடம் கலந்து பேசி , ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் அளவிற்கு முதலில் எது எளிதில் கிடைக்குதோ அதை மனமுவந்து ஏற்று படிக்க ஆரம்பியுங்கள் . பின்பு உங்கள் திறமையால் வெற்றிபெற்று அடுத்த நிலை வரும்போது ,நீங்களாகவே விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு தயாராகுகங்கள் .உங்கள் முயற்சியாலும் ஏற்கனவே படித்து வாங்கிய பட்டமுடன் மேலும் அதை விரிவுபடுத்த விரும்பிடும் அடுத்த கட்டத்திற்கு சென்றிட படிப்பை தொடருங்கள் . வாய்ப்புகளும் கல்விப்பிரிவுகளும் இந்த காலத்தில் அளவற்ற எண்ணிக்கையில் இருக்கிறது . கலவி நிறுவனங்களும் நிறைய வந்துவிட்டன .காலத்தை மட்டும் வீணாக்காதீர்கள் .

இது என்னைப் போன்றவர்களின் அக்கால நிலையை நினைத்து அதன்பிறகு தற்போதுள்ள நிலையை வைத்து நான் அறிந்து கொண்ட பாடம் .


பழனி குமார்  

நாள் : 7-Dec-18, 10:25 pm

மேலே