எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

10 . போரிடுவோம் சுதந்திரம் நமது பிறப்புரிமை சுதந்திரத்தால்...

10. போரிடுவோம் 


சுதந்திரம் நமது பிறப்புரிமை
சுதந்திரத்தால் வந்தது வாக்குரிமை
பெற்றோம் பேச்சுரிமை  - ஆனால்
பயன் என்ன....?
என் இனி [ய] வரும் இந்தியா 
ஏற்றம் காண ஏர்முனை வேண்டும்
முத்தமிழ் பயின்று  மூவேந்தர் போற்றி வளர்த்த 
பைந்தமிழ் தரணியெங்கும் சிறந்து 
நல்ல தமிழ்மணம் வீச வேண்டும்
 செம்மொழியாம் எம் தாய்மொழியே 
அரசாட்சி செய்ய வேண்டும்  
நீதியை நிலைநிறுத்திய  அம்பேத்கராய்
பகுத்தறிவு வித்திட்ட பெரியாராய்
அகிம்சையில் அண்ணல் காந்தியாய்
பாட்டுப்புலவன் பாரதியாய்
வீரத் திருமகன் கட்டபொம்மனாய் 
தன்னலம் கருதா தியாகிகளாய்
எல்லோரும் நல்லோராய் பிறந்திடல் வேண்டும்,
தீண்டாமை தீய வேண்டும்
 தீய எண்ணங்கள் அழிய வேண்டும் 
முற்போக்கு  சிந்தனைகள் வேண்டும் 
மூடப்பழக்கங்கள் அழிதல் வேண்டும்
  கல்லாமை இல்லாமையும் 
கொத்தடிமை கொள்ளாமையும் 
கொடுங்கோல் ஆட்சி 
இல்லாமையும் வேண்டும்  
பசிக்கொடுமை கூடாது 
சிசுக்கொலை புரிதலாகாது 
கல்வியில் பேதம் கூடாது 
கற்பவனிடம் சாதி கேட்கலாகாது 

சுட்டெரிக்கும்  சூரியனையும் 
தட்டிப்பறிக்கும் தைரியம் வேண்டும்
காதல் கவி புனைந்தது போதும் 
 களம் வாருங்கள்  காளையர்களே
சோரம் போகும் சொந்த நாட்டை 
சொடுக்கும் நேரத்தில் சொர்கமாக்கலாம் 
வாருங்கள் சேருங்கள் 
போராடுவோம்  நெஞ்சுரத்தோடு !

புரட்சி பாதையில்,
    மு. ஏழுமலை
9789913933
பதிவு : மு ஏழுமலை
நாள் : 22-Feb-19, 12:27 pm

மேலே