எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் காதல் நோயுக்கு என்னை விட்டு ஏன் பிரிந்து...

என் காதல் நோயுக்கு

என்னை விட்டு ஏன்

பிரிந்து சென்றாயோ காதலியே

இலையுதிர் காலம் போலே

காதல் உதிர் காலமோ ?


கதிரவன் உதிக்கும் முன்னே

உன் கார்மேக கூந்தலுக்காக

கை நிறைய பூக்களோடு

உன் வாசலில் காத்திருப்பேனே…


ஆத்திரமாய் என்னைப் பார்ப்பாய்

ஆசையோடு உன்னைப் பார்ப்பேன்

காதலில் ஊடல் இதுவென

கண்டபடி காதல் செய்தேனே …..


என் இதயத்தில் எப்போதே நுழைந்தாய்

என் காதல் நோயுக்கு மருந்தாய் இருந்தாய்

காதல் மட்டும் வேண்டாம் என்று

காற்றாக பறந்தது ஏனோ?

--- நன்னாடன்.

பதிவு : நன்னாடன்
நாள் : 5-Apr-19, 6:44 pm

மேலே