எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரணவகை மூன்று. . மனிதருள் கணிசமானோரைத் தவிர அநேகமாய்...

மரணவகை மூன்று.   .   


மனிதருள் கணிசமானோரைத் தவிர அநேகமாய் அனைவரும் மூன்று ஜனனம் மூன்று மரணங்களை அடைகிறார்கள்.   

சிசு ஜனனத்திற்குப்  பின் பிள்ளைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவம் அடையும்போது மனிதனுக்கு முதல் மரணம் முடிந்து இரண்டாம் ஜனனம் உண்டாகிறது.    
 
இளமைப்பருவம் முடிவடைந்து முதுமைநிலை ஏற்படும்போது அங்கே மீண்டும் ஒரு மரணம்: ஒரு ஜனனம்.  

 முதுமைக்குப் பின் நேருவதே நிரந்தரமான இறுதி மரணம்.   

இவற்றில் விபத்துகளாலும் வியாதிகளாலும் இறப்பவர்கள் விதிவிலக்காக இருக்கலாம்   இவர்களை ஒரு ஜனனம்; ஒரு மரணம். அல்லது இரு ஜனனம்: இரு மரணம் என்ற கணக்கில் சேர்க்கலாம்   

ஆக, ஒரு மனிதனுக்கு ஜனனங்கள் எத்தனையோ மரணங்களும் அத்தனையே.  

 மரணத்திற்கு அழுதே ஆகவேண்டும் என்றால், ஒவ்வொரு மனிதனும் தனக்காக தன்னுள் நிகழும் மரணங்களுக்கு இரண்டு அல்லது ஒரு முறையாவது அழுதே ஆகவேண்டும்.   

பிள்ளைப் பருவத்தில் இருக்கும் கவலையற்ற மனப்போக்கு வாலிபப் பருவத்தில் இருப்பதில்லை.  

 வாலிபப் பருவத்தில் இருக்கும் வசீகர சூழல் வயோதிகத்தில் இருப்பதில்லை   

ஆக எந்நிலையிலும் மனிதன் பூரண மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.   

மூச்சை ஆட்கொள்ளும் இறுதி மரணமே மனிதனை இன்னல்கள் வேதனைகள் அவலங்களிலிருந்து விடுதலை அளிக்கும் இலக்காயுதம்.  

 --------------------------------------      

பதிவு : யேசுராஜ்
நாள் : 5-Oct-19, 4:25 pm

மேலே