எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது மாறுமா??? இதம் கூடுமா??? இன்பமும் துன்பமும் நிரந்தரம்...

இது மாறுமா???

இதம் கூடுமா???
இன்பமும் துன்பமும் நிரந்தரம் 
இலை எனில்இத்துன்பம்
இத்துடன் முடியுமாஇல்லை, 
இன்னலின்
இலக்கியங்கள்
இனியும் தொடருமா?
இக்கேள்வி பதில் தேட
இக்கணம் 
இந்நாளில்
இலக்கணம் சரியென
இவ்வேளை உணருமா?
இனியது 
இனியும் பொறுக்காமல்
இயக்கம் தொடர்ந்திட
இவனை இணையுமா?
இதழ் திறந்து
இப்பூமி இதயம் காட்டிட
இறுக்கம் பின்னி
இடறி கிடக்குது
இந்நாள்;
இடர்கள்
இனியளவும்
இயங்காமல் 
இத்துடன் அடைந்திட
இருப்பது எந்நாள்?????????????

நாள் : 18-Oct-19, 12:36 pm

மேலே