***காதல் நெய்கிறாய்... இதயக் கூட்டில் உயிர் நூல் எடுத்து...
***காதல் நெய்கிறாய்...
இதயக் கூட்டில் உயிர் நூல் எடுத்து
உனக்கும் எனக்கும் இழைகள் கோர்த்து
உதிர்ந்திடா நேசமெனும் வர்ணம் சேர்த்து
மரித்தாலும் மறவாத மாசில்லா
காதல் நெய்கிறாய் மனதிலே...
****
***நீ...
நிற்காமல் போய் கொண்டிருந்த நீள்கவிதை ஒன்றிற்கு உன்னை முற்றுப்புள்ளியாக்கினேன்.
சரசரவென உருவாக தொடங்கின அடுத்தடுத்த வரிகள்...
***