எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                     "நேரம் "

" கனப்பொழுதில் 
நடந்தேறும் செயல், 
காலம் முழுவதும் 
யோசிக்க வைப்பது ஏன் ?

காலம் முழுவதும் ஒரு செயலை யோசித்தாலும் அதை செய்ய,  ஒரு கனப்பொழுது கூட கிடைக்காமல் போய் 
விடுகிறதே அதுவும் ஏன்?

இந்த உலக வாழ்க்கையே விந்தை !
அதில் நடப்பதெல்லாம் கண்கட்டு  வித்தை!. "

மேலும்

கலர் கலரா ஆடைகளை
அவங்கவுங்க உடுத்தும் போது
கடந்து போக மனசில்லாம
சிலாகித்து பார்த்திருப்பேன்

தோழியெல்லாம் கூட்டம் கூடி
கும்மி அடிச்சு ஆடுனது
சந்தி எல்லாம் போகும் போது
சிந்தையிலே வந்து போகும்

விளையாட்டு வயசுல
ஒன்னுமே புரிபடல
இப்ப, விளையாட ஆளில்லாம
அழுகை மட்டும் விளையாடுது

கூட நின்ன பொன்னெல்லாம்
இடுப்பு வலி பார்த்துருச்சி
என் தாவணி இன்னும் மட்டும்
சேலை ஆக வழியில்ல

பொறப்பு மேல கோபப்பட
ஆர்ப்பரிக்கும் மனசுக்கு
பொறுப்பில்லாத கடவுள் கிட்ட
நீதி கேட்க போகப் போறேன்

 தட்சணைக்கே வழியில்லாம
விழி பிதுங்கி நிக்குறப்போ
வரதட்சணை எப்ப கைசேர?
நா எப்ப கரை சேர?

மேலும்

இது மாறுமா???

இதம் கூடுமா???
இன்பமும் துன்பமும் நிரந்தரம் 
இலை எனில்இத்துன்பம்
இத்துடன் முடியுமாஇல்லை, 
இன்னலின்
இலக்கியங்கள்
இனியும் தொடருமா?
இக்கேள்வி பதில் தேட
இக்கணம் 
இந்நாளில்
இலக்கணம் சரியென
இவ்வேளை உணருமா?
இனியது 
இனியும் பொறுக்காமல்
இயக்கம் தொடர்ந்திட
இவனை இணையுமா?
இதழ் திறந்து
இப்பூமி இதயம் காட்டிட
இறுக்கம் பின்னி
இடறி கிடக்குது
இந்நாள்;
இடர்கள்
இனியளவும்
இயங்காமல் 
இத்துடன் அடைந்திட
இருப்பது எந்நாள்?????????????

மேலும்


மேலே