எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரசவத்திற்கு சேர்ப்பது ஒரே மருத்துவ மனையில் ... ஆனால்,...

பிரசவத்திற்கு
சேர்ப்பது
ஒரே
மருத்துவ மனையில் ...


ஆனால்,

இறந்தபின்
புதைப்பது /எரிப்பது
வெவ்வேறு
இடுகாட்டில் !காரணம் கூறுவது ,


இந்து,
இஸ்லாம்,
கிறிஸ்தவர்,என மதங்களை...!

வேடிக்கையான உலகம்.


உள்ளவரை பேசுவது
அனைவரும் ஒன்றென!
மறைந்ததும் கூறுவது
மதத்தால் வெவ்வேறன!

வெட்கமில்லா பூமியிது!


வேதங்களை
ஓதுபவரும்
போதிப்பதில்லை இதனை ...

பைபிள்
படிப்பவரும்
சொல்வதில்லை இதனை ...

குரான்
வாசிப்பவரும்
கூறுவதில்லை இதனை ....


பிறப்பு முதல்
இறப்பு வரை
தொடரும் அவலம்
சமயமும் சாதியும் !


பழனி குமார்

நாள் : 13-Nov-19, 2:44 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே