தகரை ஓரங்கட்ட ஊரில் பேச்சு ஓய்வே பணியானதால் ஓய்வுக்கு...
தகரை ஓரங்கட்ட ஊரில் பேச்சு
ஓய்வே பணியானதால்
ஓய்வுக்கு ஏங்கிய நாட்களுண்டு! அன்று
ஓய்ந்திருக்க நேரமில்லை! இனிப்பாய் ஓய்வு !
சாய்வின்றி கொடிமரமாய் முயற்சி சேர்த்து
சாதிக்கும் துணிவோடு எல்லாம் செய்தேன்
செய்தசெயல் அத்தனையும் இன்பம் சேர்க்க
செய்தொழிலில் தோல்வியின்றி வெற்றி கண்டேன்
பாய்விரித்துப் படுத்தாலும் உழைப்பின் எண்ணம்
பாராட்டே வேண்டுமென்று இதயம் சொல்லும்
தொய்வின்றி பணிசெய்து முடித்தபோதும்
தொடர்பணிகள் பட்டியலாய் நீண்டு நிற்கும்
நோய்வந்து படுத்ததில்லை, கடமை நேர்மை
நோக்கமென்று முடிந்ததுவே செயல்கள் நாளும்
மெய்யாகவே பலபேர்கள் புகழ்ச்சி செய்தார்
மென்மையாக இடிதுரைப்பே சிலரும் செய்தார்
தோய்ந்த நல்ல இனிப்புபோல நண்பர் கூட்டம்
தோள்கொடுத்து உதவிவந்த தோழர் நாட்டம்
வந்ததுபார் அந்தநாளும் மெல்ல மெல்ல
வடிந்ததுபார் ஞாபகங்கள் சொல்லச் சொல்ல
தந்தார்கள் எல்லோரும் அனுபவத்தை
தற்புகழ்ச்சி இன்றியேஎன் பெருமை பேசி
சாந்தமுடன் பணிநிறைவைப் பாராட்டியே
சந்தமுடன் கவிபடைத்து மகிழ்ந்தார் வாழ்த்தி!
நந்தவனப் பூக்கள்போல வீட்டில் கூட்டம்
நடந்ததுவே முடிந்ததுபார் பனியின் ஓய்வு.