எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெற்றியின் திறுவுகோல் வாழ்வின் தேடலும் புத்தகமே நட்பின் கூடலும்...






  வெற்றியின்  திறுவுகோல்    

வாழ்வின்       தேடலும்      புத்தகமே 
 நட்பின்         கூடலும்        புத்தகமே 
 அன்பை        போதிக்கும்      புத்தகமே 
 அறிவால்      சாதிக்க        புத்தகமே   
 

புரட்சியின்      தூண்டலும்      புத்தகமே 
அமைதியின்    நாடலும்        புத்தகமே 
 ஞானம்         கொடுப்பதும்    புத்தகமே 
 நாட்டை        வென்றதும்    புத்தகமே     

 புது புது        அறிவை      கொடுத்திடுமே 
 பல பல        எண்ணம்      உதித்திடுமே! 
 தினம் தினம்    புதிதாய்        பிறந்திடுவாய்
 தொட தொட    நீயே          உயர்ந்திடுவாய்!   

 வாசிப்பு         வாழ்வுடன்      ஒன்றிட 
 வாழ்வே        சிறந்திடும்       படித்திட! 
 அறிவால்      உலகை        வென்றிட 
 நேசித்து        வாசிக்க        தொடங்கிட!                                                

 பா.விஜய்      

பதிவு : B VIJAYAKUMAR
நாள் : 4-Feb-20, 12:16 pm

மேலே