எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட ஊக்கம் அளித்த எழுத்து.காம் இணையதளத்திற்கும், அதன் சக கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..


https://notionpress.com/read/enakkul-sila-kirukkalgal

மேலும்

நல்வாழ்த்துகள். இன்னும் இன்னும் எழுதி இமயப் புகழ் அடைய வாழ்த்துகள். 16-Mar-2022 8:47 am

அன்பை நீங்கள் ஏன் நாடவில்லை?  என்று ஒரு புத்தகம் வெளியிட்டேன். அதன் பிறகே அன்பை யாரும் நாடுவதில்லை என்று புரிந்து கொண்டேன்.


மேலும்






  வெற்றியின்  திறுவுகோல்    

வாழ்வின்       தேடலும்      புத்தகமே 
 நட்பின்         கூடலும்        புத்தகமே 
 அன்பை        போதிக்கும்      புத்தகமே 
 அறிவால்      சாதிக்க        புத்தகமே   
 

புரட்சியின்      தூண்டலும்      புத்தகமே 
அமைதியின்    நாடலும்        புத்தகமே 
 ஞானம்         கொடுப்பதும்    புத்தகமே 
 நாட்டை        வென்றதும்    புத்தகமே     

 புது புது        அறிவை      கொடுத்திடுமே 
 பல பல        எண்ணம்      உதித்திடுமே! 
 தினம் தினம்    புதிதாய்        பிறந்திடுவாய்
 தொட தொட    நீயே          உயர்ந்திடுவாய்!   

 வாசிப்பு         வாழ்வுடன்      ஒன்றிட 
 வாழ்வே        சிறந்திடும்       படித்திட! 
 அறிவால்      உலகை        வென்றிட 
 நேசித்து        வாசிக்க        தொடங்கிட!                                                

 பா.விஜய்      

மேலும்

எனக்கு பிடித்த புத்தகம்

நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான்.

'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey) ஆல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1989ல் வெளியானதிலிருந்து இற்றை வரை 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (துரதிஷ்டவசமாக, தமிழில் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை). அவ்வளவிற்கு இந்த புத்தகம் ஏன் பலரை கவர்ந்த்தது என்பதை நான் இதை வாசித்தபோது உணர்ந்து கொண்டேன்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் முகம் கொடுக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வுகாண இப்புத்தகம் உதவிபுரிகிறது. (உண்மையில் இப்புத்தகம் உளவியல் சார்ந்த புத்தகம்). அப்படியென்றால், ஒவ்வொருவருடைய வாழ்வில் எற்படும் குறிப்பான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு இந்த புத்தகத்தில் உண்டு என்று அர்த்தம் அல்ல. ஆனாலும், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இப்புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இப்புத்தகத்தின் சாராம்சம் என்ன என்று சொல்வது மிகக்கடினம். எனென்றால், என்னை கவர்ந்த, வியக்கவைத்த நிறைய கருத்துகள் இப்புத்தகத்தில் உண்டு. புத்தகத்தின் தலைப்பு சொல்கிறபடி நாம் செய்யும் கருமங்களை மேலும் வினைத்திறனுள்ளதாக செய்வது எப்படி, அன்றாடம் நாம் மற்ற மனிதர்களுடன் பழகும்போது வரக்கூடிய சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

எல்லவற்றையும் இங்கு எழுத நேரமும், பொறுமையும் இல்லை. எனவே நீங்களே இந்நூலை வாசித்து உணர்தல் பிரயோசனமாக இருக்கும். நூலாசிரியர் சொல்வது போல, இங்கு சொல்லப்பட்ட பல விஷயங்கள் 'Common Sense' தான். ஆனால், Common Sense எல்லாம் Common Practice (பொதுவாக பழக்கத்தில் உள்ளவை) அல்ல. இப்புத்தகதை எனக்கு பிடித்த காரணம் ஏன், எப்படி, எப்போது இப்பழக்கங்களை கையாள்வது என்று மிக ஆழமாக கருத்துகளை சொன்ன விதம் தான்.

இப்புத்தகத்தின் பிரதிகள் அனேகமான நூலகங்களில் கிடைக்கும். எனவே, வாங்க வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனாலும், என்னை பொறுத்தவரை இதை புத்தகம் என்று சொல்லவதை விட, நல்ல ஒரு ஆசான், வாழ்க்கை முழுவதும் கூட வரும் தோழன் என்று சொல்லுவேன். எனவே, இரவல் எடுத்து வாசியுங்கள். பிடித்தால் வாங்கலாம்.

மேலும்

  "சமுகம் உயர்வாக போற்றிப்  பரிசளிக்கும் விசயங்களைத் தான் மக்களும் செயலாற்றுவார்கள். நம்பிக்கைக்கு வரவேற்பிருந்தால், மக்களும் நம்பிகையளிப்பவர்களாக இருப்பார்கள்".   -  மெலூஹாவின் அமரர்கள் 

மேலும்


மேலே