பேச்சால் வெல் மண்ணாலும் மன்னனை எதிர்க்கும் ஒரு சொல்...
பேச்சால் வெல்
மண்ணாலும் மன்னனை
எதிர்க்கும் ஒரு சொல்
புரட்சி!
அலைந்தோடும் மனதினை
ஆட்கொள்ளும் ஒரு சொல்
ஆன்மிகம்!
மாலைசூட மங்கையரை
மயக்கிடும் ஒரு சொல்
காதல்!
மக்களின் மனங்களை
வெல்லும் ஒரு சொல்
அரசியல்!
உணர்வுகளின் வெளிப்பாடல்ல
பேச்சு - உன்னத
மனிதர்களின் அடையாளம்!
பா.விஜய்