எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*தோழன்* காமம் கலைந்த என் காதலன் அவன் ......

*தோழன்*

காமம் கலைந்த என் காதலன் அவன் ...

கூட்டத்தின் நடுவில்...
பயணத்தின்
இடையில்...

பிறர் கை என் மீது படாமல் தன் கையால் வேலி அமைத்து என்னைக் காக்கும்  போது என் தந்தையாகிறான்....

வீட்டில் கோபித்து பசியோடு பள்ளிக்கு வருககையில் குழந்தையாய் பாவித்து 
அதட்டி உணவூட்டும் போது என் அன்னை ஆகிறான் ...

மனம் சோர்ந்து அவன் தலை சாய்க்கும் போது என் மடியில் என்  பிள்ளை ஆகிறான் ...

வருடங்கள் கடந்தும்... வயது வளர்ந்தும் ...

இன்னும் சிறு பிள்ளை சண்டையாய் என்னிடம் கோபித்துக் கொள்ளும் போது என் தோழனாகவே இருக்கிறான்....

பதிவு : மல்லி
நாள் : 6-Feb-20, 2:49 pm

மேலே