எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த உயிர்கொல்லி வைரஸ் " கரோனோவை " எதிர்கொண்டு...

  இந்த உயிர்கொல்லி வைரஸ் " கரோனோவை " எதிர்கொண்டு விரட்டிட , ஒழித்திட நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைவது போல , 


சமுதாயத்தை அழிக்கும், சீர்குலைக்கும், துண்டாடத் துடிக்கும் ,
சாதி எனும் அரக்கனை கொன்றிட , 
மதம் எனும் தீயசக்தியை தீயிட்டுக் கொளுத்த , 
தீவிரவாதம் எனும் தீயவர்களின் செயலை தடுத்திட ,
மதங்களின் பெயரால் மதவெறி பிடித்து மாபாவங்களை செய்திடும் மாபாவிகளை தடுத்திட , தண்டிக்க , அழித்திட ,

துறவறம் பூண்டவர் போல வேடமிட்டு , நல்லறம் மீறி , நன்னடத்தைத் தவறி நடந்தும் , குற்றங்கள் பல செய்தும், பிறகு அரசியலில் நுழைந்து தியாகிகள் போல கபட நாடகம் நடத்துவோரை நாட்டைவிட்டே துரத்திடவும் , 

காலையில் ஒன்று, மதியம் ஒன்று பின்பு மாலையில் ஒன்று என மாறி மாறி பேசி மக்களை குழப்பி திசைதிருப்புவோரை நமது செயலால் பாடம் புகட்டவும் , 

எது மக்களுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும்  ஏற்றதோ ,  சிறந்ததோ அதனை யார் செய்து முடிப்பார் என்று யோசித்து , எவருக்கு தகுதி உள்ளதோ அவரை பின்பற்றவும் , ஆதரவளிக்கவும் , 
எப்படி ஒரு "ஜல்லிக்கட்டுக்கு" அவரவர் சுயமாக முடிவெடுத்து தார்மீக பொறுப்பேற்று ஒன்றிணைந்து போராடி பெற்றோமோ , அதைப்போல எதிர்காலத்திலும் சாதி மதங்களை மறந்து நமது பொது எதிரியை அடையாளம் அறிந்து செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து . 


பலருக்கு இது , விந்தையாக , வேடிக்கையாக , கேலியாகக்கூட இருக்கலாம் .ஆனால் அடுத்த தலைமுறையின் நல்வாழ்வை நினைத்து, இணைந்து செயலாற்றி வெற்றியும் காண்போம் ! 

வளர்ந்தும் வளராமல் இருக்கும் நம் இந்திய திருநாட்டை உலக அரங்கில்  முதன்மையாக திகழ திறம்பட செயலாற்றுவோம் . 


ஏழை என்பவனும் , படிப்பறிவு  இல்லாதவன் என்பதும் , தீயசக்தி என்பவனும் , சாதிமத வெறியில்லா சாதாரண மனிதன் , நேயம் கொண்ட நெஞ்சம் படைத்தவன் கொண்டவர்களே நமது தாயகம் என்ற நிலையை உருவாக்குவோம். 

வாழ்த்துகள் !


பழனி குமார்
 19.03.2020  

நாள் : 19-Mar-20, 11:10 pm

மேலே