எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சட்டத்தால் செய்ய முடியாததை , அதிகாரத்தால் அடக்க இயலாததை...

சட்டத்தால் செய்ய முடியாததை , அதிகாரத்தால் அடக்க இயலாததை மிரட்டலால் பணிய வைக்க முடியாததை , இந்த " கொரானா " எனும் கொடிய வைரஸ் செய்ய முடிகிறது என்றால் , உண்மையில் ஆச்சரியம் !


இன்று காலையில் இருந்து தொலைக்காட்சிகள் வழியாக காணும்போது ,இந்த " மக்கள் சுய ஊரடங்கு " என்பது ஏதோ ஒரு பாரத் பந்த் காட்சிகளை போன்ற ஒரு உணர்வை
ஏற்படுத்துகிறது . இதுவும் நல்லதுதான் .மக்களிடையே தோன்றிய இந்த உணர்வு, பிரதமர் வேண்டுகோளால் வந்ததா என்று தெரியவில்லை . ஆனால் மக்கள் கொரானாவினால்
தனது உடல்நலனும் பாதிக்கக்கூடாது மற்றும் மற்றவர்களும் பாதிப்பில்
சிக்கித் தவிக்கக்கூடாது என்ற நல்ல எண்ணம் , பயம் , சமூகத்தைப் பற்றிய ஒருமித்த சிந்தனையும் , அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலையும் , நாட்டின் நலன் கருதி எழுந்த உள்ள உறுதியும்
மட்டுமே காரணம் என்றே நினைக்கிறேன் .

ஏனெனில் இதில் மட்டும்தான் சாதிமத வேறுபாடுகள் களைந்து , அரசியல் மாறுபாடு ஒருதுளியும் தெரியா வண்ணம் ஒற்றுமை மேலோங்கி இருக்கிறது என்பதை காட்டுகிறது.இதே ஒற்றுமை மக்களிடம் எதிர்காலத்திலும் அனைத்து பொதுவான நல்ல காரியங்களுக்காக அனைவரின் நலன் கருதி வந்திட வேண்டும் , வந்திடும் என்று நம்புகிறேன் .

அன்பு வேண்டுகோள் ஒன்று ....

அவரவர் தங்களின் வீட்டுக்கு அருகில் எவரேனும் நடைபாதையில் வசிப்பவர் இருந்தால் மற்றும் ஏழை மக்கள் எவரேனும் கண்ணில் தென்பட்டால் அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உணவு வழங்கிட வேண்டும் .


பழனி குமார்
22.03.2020

நாள் : 22-Mar-20, 12:29 pm

மேலே