இன்றைய சூழலில் பொதுநலம் காத்திடும் நோக்குடன் , நாம்...
இன்றைய சூழலில் பொதுநலம் காத்திடும் நோக்குடன் , நாம் சுயநலமுடன் இருப்பதில் தவறில்லை ! அவசியமும் கூட ! காலத்தின் கட்டாயமும் கூட !
ஆம், தனித்திருப்போம் நாம் முதலில் !கூடி இருப்பதை தவிர்ப்போம் சிலகாலம் !வீதி உலா வருவதைத் தவிர்ப்போம் அவசியம் ,அவசரம் தவிர !
தேடிவரும் உயிர்க்கொல்லி திரும்பிச் சென்றிட ஓடி ஒளிவதும் , ஒதுங்கி செல்வதும் நலலது !
அவதிப்படும் நிலை அன்றாடம் காய்ச்சிகளுக்கு !
அல்லலுறும் சூழல் உழைக்கும் வர்க்கத்திற்கு !
வருந்திடும் நிலை வாய்ச்சோறு கிடைப்பதற்கு !
வாடிடும் சூழல் உடலால் உள்ளத்தால் வறுமையின் விளிம்பில் வாழ்பவர்க்கும் கையேந்தி உயிர் வாழும் மனிதர்களுக்கும் !
நிச்சயம் வறுமைக்கோடு இடம்மாறும் நிலைதான் ,
ஏழைகள் எண்ணிக்கை ஏறும் அசாதாரண சூழல்தான் !
ஆனால் , அனைத்தையும் விட உயிர் முக்கியம் என்பதால் நாம் அனைவரும் கனத்த இதயமுடன்
இருக்க வேண்டிய , அமைதி காக்க வேண்டிய , வருந்த வேண்டிய நிலை !
இருக்க வேண்டிய , அமைதி காக்க வேண்டிய , வருந்த வேண்டிய நிலை !
இதையும் கடந்து செல்வோம் வென்றுக் காட்டுவோம் இயற்கையின் சதியை முறியடித்து , மனவலிமையுடன் வாழ்ந்துக் காட்டுவோம் !
அனவைருக்கும் இது இக்கட்டான , வருத்தம் வழிந்திடும் காலகட்டம் தான் என்பதை மறுப்பதற்கில்லை !
பழனி குமார்
27.03.2020
27.03.2020
( படம் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்தது )