எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆடினோம் ஆடினோம் கொஞ்சம் அதிகமாகவே ஆடினோம் .. இந்த...

ஆடினோம் ஆடினோம் 
கொஞ்சம்  அதிகமாகவே ஆடினோம் .. 
 

இந்த உலகம்
அனைத்து  ஜீவராசிகளுக்கும் உரித்தானது 
என்பதனை மறந்து ஆடினோம் ..  


எல்லையை மீறினோம் 
எனக்கு எல்லையே இல்லை 
என்று சொன்னவனை மறந்து ஆடினோம் ..  


ஐம்புலன் அனைத்தும் 
அடக்காமல் ஆடினோம் ...    
ஐம்பூதங்களை மறந்து ஆடினோம் ... 


மதத்தை வளர்த்தினோம் 
மனிதத்தை வளர்த்தாமல்    
முடிந்தமட்டும் ஆடினோம்.. 
 
இயற்கை எனும் 
பெரிய ஆசிரியனை 
மறந்து ஆடினோம் ..  


உலகத்தையே தன்வசம் 
திரும்ப வைக்க 
தன்னிலை மறந்து ஆடினோம் ..


இன்று ஒரு சிறு கிருமி
 மொத்த உலகத்தையும் 
தன்வசம் திரும்ப வைத்திருக்கிறது ..  


இன்று 
இயற்கை 
இயற்கையாய் இருக்கிறது..


உலக அமைதி நாள் கொண்டாடிய அனைவரும் இன்று 

உலகமே அமைதியாய் இருக்கிறது என்பதனை மறந்து.. 


பதிவு : hariharapradap
நாள் : 26-Mar-20, 1:04 pm

மேலே