எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்மை நிற தொப்பியை... நிறம் மாற்ற துடிக்காதே வெறி...

வெண்மை நிற தொப்பியை...
நிறம் மாற்ற துடிக்காதே
வெறி கொண்ட நரியே....

முக்கோண வர்ணங்களை 
காவி நிறமாக்கத்துடிக்கும் 
கள்ளிச்செடியே....
உன் விஷத்தன்மை 
அறியாத உலகுண்டோ.....

உன் வர்ண நிறச் சாயத்தை 
வடநாட்டில் தெளித்து விட்டாய்...

ஒற்றுமையாய் இருந்த எங்களின் 
தேன் கூட்டில் கல்லெறிந்து எங்களின் ஒற்றுமையை சிதைத்து விட்டாய்....

விஷம் நிறைந்த உன் யுக்தியால் 
புத்தியுள்ள எம் மானிடத்தின் 
அறிவை பூட்டி விட்டாய்..

உன் அதிகாரத் திமிரை அடக்க வந்த நோயையும் பாய்கள் மீது திணித்து விட்டாய்....

குண்டு வெடித்தாலும் பாய்கள் தான்
நண்டு கடித்தாலும் பாய்கள் தான்....

நாங்கள் இருட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தும்

செய்வதறியா விளக்கை அணைக்க சொல்கிறாய்....

இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறாய்...
சோர்ந்து விடாதே உன் சோதனையை எதிர்கொள்ள நாங்களும் காத்திருக்கிறோம்.....!

நீ கலங்கடிக்க வந்தது குட்டையை அல்ல
எட்டா நீளம் கொண்ட ..கடலை நினைவில் வைத்துக்கொள்....!
Create by ✍️ thamim ✍️

நாள் : 10-Apr-20, 11:16 am

மேலே