எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



தனிமையின் இனிமையும் ௨ணர்ந்தேன், கொடுமையும் உணர்ந்தேன் கொரோனா ஊரடங்கில்.. 

மேலும்

குழிக்குள் மாட்டிக்கொண்டேன்..
எங்கும் அலறல் சத்தம்..
திடப்படுத்திய மனதுடன் செதுக்கியெடுத்த நினைவுகளுடன்  அருகருகில் செத்துவிட்ட மனிதகுவியல் கண்டேன் 
 வேறொரு குழியில்..
சில பேர்கள் வந்து வந்து போவதும்..
தங்கி கிடப்பதையும் உணர்ந்தேன்..
நன்றாகவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஏணியின்பால் தவறுதலாக எற நினைத்து தவறி போனதே அதிகம்..
வலுஇல்லாதவர்கள் வலுக்கட்டடயாவே தள்ளி விடபட்டார்கள்.. 
ஒருவனுக்காக உலகே காத்திருக்க வெகுநாள் ஆகிவிடட போதும் அவசரமாக மீட்க எடுக்கபட்ட முயற்சிகள் யாவும் மேலும் எங்களை அதே குழிக்குள் சவவிக்க போவதை நாங்கள் இப்போது தான் தெரிந்து கொண்டோம்..

பொறு நண்பா..உங்களை மீட்க எங்களால் இன்னொரு குழியும் தயாராகிறது..
மேலெழுந்து வந்தோம் ஒரு நாள்.

இப்போது அந்த குழியில் இருப்பவை எல்லாம் செத்து போன எங்கள் பொறாமை எண்ணங்களும் சுயநல அழுக்குகளும் தான்..

மீள்வோம் கொரோனாவிலிருந்து..

Sivakumar

மேலும்

வெண்மை நிற தொப்பியை...
நிறம் மாற்ற துடிக்காதே
வெறி கொண்ட நரியே....

முக்கோண வர்ணங்களை 
காவி நிறமாக்கத்துடிக்கும் 
கள்ளிச்செடியே....
உன் விஷத்தன்மை 
அறியாத உலகுண்டோ.....

உன் வர்ண நிறச் சாயத்தை 
வடநாட்டில் தெளித்து விட்டாய்...

ஒற்றுமையாய் இருந்த எங்களின் 
தேன் கூட்டில் கல்லெறிந்து எங்களின் ஒற்றுமையை சிதைத்து விட்டாய்....

விஷம் நிறைந்த உன் யுக்தியால் 
புத்தியுள்ள எம் மானிடத்தின் 
அறிவை பூட்டி விட்டாய்..

உன் அதிகாரத் திமிரை அடக்க வந்த நோயையும் பாய்கள் மீது திணித்து விட்டாய்....

குண்டு வெடித்தாலும் பாய்கள் தான்
நண்டு கடித்தாலும் பாய்கள் தான்....

நாங்கள் இருட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தும்

செய்வதறியா விளக்கை அணைக்க சொல்கிறாய்....

இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறாய்...
சோர்ந்து விடாதே உன் சோதனையை எதிர்கொள்ள நாங்களும் காத்திருக்கிறோம்.....!

நீ கலங்கடிக்க வந்தது குட்டையை அல்ல
எட்டா நீளம் கொண்ட ..கடலை நினைவில் வைத்துக்கொள்....!
Create by ✍️ thamim ✍️

மேலும்

ஞாயிறு விடிந்தால்
இந்தியாவில் ஊரடங்கு...

ஒரு நாள் மட்டும் நீ 
வீட்டில் அடங்கு....

எங்கிருந்தோ வருகிறது
கொடிய கிருமி...

பரப்பி விடாதே 
நீ இருமி...

வாழத்தான் 
பிறந்தோம்
மண்ணில்...

அலட்சியம் 
வேண்டாம்
உன்னில்...

உன் உயிர் காக்க
துடிக்கிறது எத்தனையோ துறை...

நீ மட்டும் சொல்லி திரியலாமா ஊரெல்லாம் குறை...

விரலால் கூட
பிறரை தொடாதே...

வீம்பாக இருந்தால் நோய்
உன்னை விடாதே...

கண்.,
காது.,
மூக்கு.,என
ஐம்புலன்...

விரலால்
தொடாமல்
இருப்பதே
பெரும்பலன்...

கிருமிகள்
இருக்கும்
கண்ணுக்கு
தெரியாமல்...

நீ இருக்க
வேண்டாம்
அது மட்டும்
புரியாமல்....

கழுவுவோம்
சோப்பினால்
கையை...

காத்திடுவோம்
நோயின்றி
மெய்யை...

காற்றில்
தண்ணீரில்
பரவாது...

தொட்டால்
விரல்பட்டால்
விடாது...

உலகம் 
முழுவதும்
எத்தனையோ
பலி....

நமக்குள்
இருக்கட்டும்
ஒரு மீட்டர்
இடைவெளி...

தனிமைபடு
மார்ச்
இருபத்து
இரண்டு...

கிருமியை
விரட்டும்
எண்ணம்
மனதில் 
கொண்டு...

அடங்கு
அடங்கு
வீட்டில்...

நன்றாய்
வாழலாம்
நாட்டில்...

இது நம்
உயிர்
காக்கும்
யுத்தம்...

இப்போதைய
தேவை
முழு முதல்
தன்சுத்தம்...

இனிமை
தரட்டும்
தனிமை...

தாய்
நாட்டுக்கு
கிடைக்கும்
பெருமை...

________________________

நன்றி.,
அன்புடன்.,
சிறை கவிஞன்.பசுமைபுறா
( சந்தோஷ் குமார்.மு )

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே