எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தெளிவடையா உள்ளம் வழியறியாத பாதை ஏக்கங்களான எண்ணங்கள் நீர்த்துப்போன...

தெளிவடையா உள்ளம்
வழியறியாத பாதை
ஏக்கங்களான எண்ணங்கள்
நீர்த்துப்போன நம்பிக்கை
நாளைய வாழ்க்கை நிலை
சிதறுண்ட சிந்தனைகள்
பிள்ளைகளின் எதிர்காலம்
தொடர்பறுந்த உறவுகள்
கைவிட்ட நண்பர்கள்
வரவேண்டிய வருமானம்
பெற வேண்டிய மரியாதை
நிமிர வேண்டிய அரசுகள்
நிலை மாறிய இதயங்கள்
அலை பாயும் நெஞ்சங்கள்
கசிந்து உலராத விழிநீர்
நிம்மதியிழந்த மனங்கள்


என்று ஊரடங்கை தளர்த்தினாலும், நீக்கினாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் , இதுதான் உண்மை நிலை .
இதிலும் கொரோனா தொற்று மாதிரி, சாதி, மதம், கட்சிகள், ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் ஒன்றே.எல்லோருக்கும் ஒருவித குழப்பம் தான் நிலவும்.

அனைத்தையும் எதிர்கொள்ளும் மனதிடத்துடன் நம்பிக்கையுடன் மக்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.நாம் அனைவரும் புதிதாக பிறக்க உள்ளோம் . எதையும் சவாலாக ஏற்று புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் தோன்ற வேண்டும் .


அனைத்திலும் சாதித்து வெற்றிக் காண்போம் !


பழனி குமார்
26.04.2020  

நாள் : 27-Apr-20, 7:11 am

மேலே