எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொரோநா கற்று தந்த பாடம் விமானம் பறக்காத வானம்...

                       கொரோநா கற்று தந்த பாடம் 

விமானம் பறக்காத வானம் 
வாகனம் காணாத  வீதி 
இரைச்சல் இல்லாத நகரம்   
களங்கமில்லாத காற்று 
கன்னிப்  பொலிவுடன் கங்கையின் பிரவாகம் 
மண்ணும் மரமும் மலைகளும் மகிழ்ப்பொழுது 
  
ஓசோன் ஓட்டை ஒரு வழியாய் வாய் மூடி ஒட்டி கொள்ள 
மான்களும் மயில்களும் மந்திகளும் சர்வ சுதந்திரமாய் வீதியிலே
பறவைகளின் ஆனந்த ரீங்காரம் பல யுகங்களுக்கு பிறகு..   
பார்க்க கேட்க கூட கொடுத்து வைக்காத பாவப்பட்ட மனிதன்.. 
கஷ்டத்திலும் சந்தோசம்.. கடவுளுக்கும் நமக்கும் ஒரே நிலை 
வெங்கடாசலபதிக்கும் வரலாறு காணாத நீண்ட விடுமுறை  
 
நிலவை அளந்தவனை நிர்கதியாக்கி 
கூண்டில் அடைத்த கிளியாய் வித்தை காட்டி   
அணுவை பிளந்து காற்றை கிழித்து தறிகெட்டு 
பரந்த மனிதத்தை ஒரு மூலையில் முடக்கி   
பறவைகளும் விலங்குகளும் கவலை இன்றி சுற்றி திரிய 
மனிதம் அரண்டு மிரண்டு ஒடுங்கி  போக  
 
இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமே சொந்தமல்ல... 
மலை, காடு, நதி, கடல், பறவை, விலங்கு அனைவருக்குமே..   
இயற்கையின் வலிமையை மீண்டும் புரிய வைத்து 
இந்த முறை மிக அழுத்தமாக....   
கொரோநா ஆன்லைனில் அனைவருக்கும் கற்று தந்த பாடம்  

பதிவு : MOHAN
நாள் : 9-May-20, 1:51 pm

மேலே