எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரணம் .....! நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எவருக்கும் எந்த நிலையிலும்...

  மரணம் .....!

நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
எவருக்கும் எந்த நிலையிலும் 

நிகழக்கூடிய ஒன்று.

"மனித வாழ்வு" எனும் புத்தகத்தின்

இறுதி அத்தியாயத்தின்
இறுதிப் பக்கத்தின்
இறுதிப் பத்தியின்
இறுதி வரியின்
இறுதி வார்த்தை தான் "மரணம்" !

வாழ்க்கை முடிவுறும் தறுவாயில் ,
இறுதியாக முணுமுணுப்பர்
பேச முடிந்தவர்கள் !

பேச இயலாதவர்களின்
நெஞ்சில் நிழலாடும் ,
நடந்து முடிந்தவைகளும்
நடக்க இருப்பவையும் !

வாழும் காலத்தில் நம்மை
வசை பாடியவர்களை நினைத்து
நிந்திக்கவும் தோன்றாது .

வாழ்த்திப் பேசியவர்களை 
நினைத்து பெருமைப்பட்டுக்
கொள்ளவும் முடியாது.
இதயத்தில் ஒரு போராட்டம் நிகழும் !

நாம் வாழ்ந்தக் காலம்
நமக்கு பொன்னானதோ , வீணானதோ ,
அது நமக்குப்பின் தான் தெரியவரும் .
அதை அறிந்துக் கொள்ள
நம்மால் தான் முடியாது !

இதெல்லாம் புரியாமல் , 
சிந்திக்காமல் உலகில் பலரும்
பலவிதமாக வாழ்கின்றனர் !
நாம் வாழ்ந்ததற்கான அடையாளம்
பூமியிலும் , அனைவரின் உள்ளத்திலும்
சுவடுகளாக நிலைக்க வேண்டும் !

இது வாழ்வியல் தத்துவமல்ல ,
வாழ்பவர்கள் கற்க வேண்டிய பாடம் !

அடுத்தத் தலைமுறையினர்
சிந்தையில் உலவ வேண்டிய சிந்தனை !

பழனி குமார்  

நாள் : 19-May-20, 6:46 am

மேலே