எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெருங்கதையொன்று மனப்பாடமாய் என்னுள்ளே.. விதையிட்டு.. வேர்முளைத்து.. நீருண்டு.. கிளைபூக்க.....

பெருங்கதையொன்று மனப்பாடமாய் என்னுள்ளே.. 

விதையிட்டு.. வேர்முளைத்து..
நீருண்டு..
கிளைபூக்க..
காத்திருக்கிறது..! 

வலியுணந்து கேட்பவர்க்கே
அது காயாவதும்.. கணியாவதுமாய்.. இருக்கக்கூடும் !!

எண்ணிலடங்கா மனிதர்களின் எண்ணங்களை..
என்னிலிருந்து உணர்ந்துகொள்ள முயர்ச்சித்த அதனால் என்னமோ ! 

கனவுமயமான இந்த இளமையை 
பெருங்கயிற்றை கட்டி..
கடவுளவன் கைக்குள் இழுத்துபிடித்துள்ளான் !!

அமிழ்தினும் இனியதெம்மொழி 
எனச்சொல்லலாயினும்..
மனம்கொண்ட உணர்வுதனைப் பகிர 
வார்த்தைகளை இன்னும்..
தேடியே அலைகிறேன்..! 

கோடுகிழித்த வாழ்க்கையை 
விட்டோடி விலகிட நினைத்தால்..
ஆங்காங்கே சிறு புள்ளிவைத்து விடுகிறது நான்நம்பாத விதியொன்று..  
என் நம்பிக்கையின் மீதேறி..!

மரணத்தை நோக்கி பயணிக்கிற 
இம்மானுட வாழ்வென்று உணர்ந்தபின்.. 
நான் மட்டும் என்னவாகிவிட போகிறேன்.. !

நகர்த்திய போக்கிலே..
நகர்ந்துவிடுகிறேன்.. 
எல்லாவற்றையும் கடந்தபடி..

"நீர் தந்த பெருவாழ்வுதனை"
............... இறைவா.............

பதிவு : சதுர்த்தி
நாள் : 18-May-20, 7:18 am

மேலே