கடந்த ஆறு மாதங்களாக நம்மை இந்த கொரோனா தொற்று...
கடந்த ஆறு மாதங்களாக நம்மை இந்த கொரோனா தொற்று எப்படி எல்லாம் பாடாய்ப்படுத்துகிறது என்பதை நினைத்து பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இது இயற்கையின் செயலா அல்லது செயற்கையாக நடந்த சதியா என்று புரியவில்லை.உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பல்வகை இழப்புகள், கொடுமைகள், அறிந்தவர் மற்றும் அறியாதவர் உயிரிழப்புகள், நிதி நெருக்கடிகள் என கவலைத் தரக்கூடிய நிகழ்வுகள்.
இவை அனைத்தையும் கடந்து நாம் பயணத்தை தொடர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நினைக்கும் போது மிகுந்த அச்சம் நெஞ்சில் எழுகிறது.இதில் வசதி படைத்தோர், அளவுக்கு மீறி சொத்து சேர்த்துக் கொண்டு வாழும் அரசியல்வாதிகள், சில திரையுலக கலைஞர்கள் மற்றும் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து சேமித்து வைத்துள்ளோர் விதிவிலக்காக இருக்கலாம்.ஆனால் மற்றவர்கள் நிலையை நினைத்து பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.இதுவும் கடந்து போகும் என்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
காலம் மட்டுமே பதில் கூற முடியும் .எனக்கு இதனால்
உடல் வலியுடன்,
இதய வலியும் சேர்ந்து கொண்டது.
பழனி குமார்
18.09.2020