அவள் சதை விற்பனைக்கு பகுதி -1 "யக்கா மச்சானை...
அவள் சதை விற்பனைக்கு பகுதி -1
"யக்கா மச்சானை வெட்டி சாய்ச்சுபுட்டாங்க அக்கானு" வேதவள்ளி தம்பி ஓடி வந்து சொன்ன சேதி கேட்டு சுவற்றில் சாய்ந்தவள் பேச்சு மூச்சின்றி சிலையாய் நின்றாள்.
வேதவள்ளி ராமையா தேவரின் மனைவி.ராமையா தேவர் ஒரு நிலத்தகராறில் ஆத்திரப்பட்டு வேலுச்சாமி அம்பலம் மகனை வெட்டி கொன்று விட ஏழு வருடம் சிறை தண்டனை முடிந்து இன்னைக்குதான் வெளியில் வந்தார்.என்னைக்கு ராமையா தேவர் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டதோ அன்னைக்கே அவரோட மரண தேதியும் குறிக்கப்பட்டதுன்னுதான் சொல்லனும்.பழிக்கு பழி, பரம்பரை பகை இதெல்லாம் அந்த சமூகத்துக்கு புதுசில்ல.
எல்லா காரியமும் முடித்து ரொம்ப சோர்வாகவே இருந்தாள் வேதவள்ளி.அழுது கொண்டேயிருந்தவளை நோக்கி "ஏத்தா ஏன் இப்படி உட்காந்து அழுதுகிட்டு இருக்க?சின்ன மருது பெரிய மருது கணக்கா ரெண்டு சிங்கத்தை பெத்து வச்சிருக்க.அவனை பழிக்கு பழி வாங்கிடலாம் விடுனு" மீசையை முறுக்கிய படி ஆவேசமா பேசினார் பெரியவர்.
"பழிக்கு பழி வாங்குறேன்னு என் புள்ளைகளை பலி கொடுத்துறாதீங்க அப்பு.அவனுங்க பகை மறந்து படிச்சு பெரியாளா ஆகனும்.அரிவாளை தூக்கி அல்பாயுசுல போனது அவங்க அப்பனோட போகட்டும்னு" தன் பிள்ளைகளை பகை ஊட்டாம படிப்பை ஊட்டி வளர்க்குறா சார் அந்த தாய் ராஜா கதை சொல்ல பாதியிலேயே மறித்தார் தயாரிப்பாளர்.
"என்னப்பா நீ பகை மறந்து படிச்சானா பார்க்குறவனுக்கு எப்படி இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.பழிக்கு பழினு ஆக்சன் சீன் வச்சா தானே நமக்கு கல்லா கட்டும்னு"தயாரிப்பாளர் சொல்ல
"சார் பழிக்கு பழி மட்டுமே அந்த சமூகத்தோட பழக்கம் இல்ல சார் அங்கயும் உறவுகளுக்குள்ளான கட்டமைப்பு பத்தி அருமையான விசயம் இருக்கு.இதுவரை அவங்களை காட்டுமிராண்டியா காட்டி சினிமா எடுத்தாச்சு. இனியாவது படிச்சு முன்னேறி அதிகாரத்துல வந்து தப்பை தட்டி கேட்குற மாதிரி படம் எடுக்கலாமே"
"சரிதான் தம்பி நீங்க சொல்லுற மாதிரி சீர்திருத்தம் பண்ணுனா சினிமால சில்லறை பார்க்க முடியாதே.இதெல்லாம் நீங்க படம் தயாரிக்கும் போது பண்ணிக்குங்க"
"சார் அது வந்து"
"தம்பி இந்த கதையெல்லாம் வேணாம் உங்களுக்கு பத்து நாள் டைம் தாரேன் நல்லா திரில்லர் க்ரைம் கதை ரெடி பண்ணி கொண்டு வாங்க. அதுல கொஞ்சம் மெசேஜ் உங்க திருப்திக்கு சொல்லிக்குங்க.உங்களால முடியும்னா சொல்லுங்க.ஆனா உங்களுக்கான டைம் பத்து நாள்தான்"
"ஓகே சார்".
பத்து நாள்ல ஒரு த்ரில்லர் க்ரைம் அதுல மெசேஜ்.முதல்ல என்னை நான் ப்ரூப் பண்ணனும் அதுக்கு வந்த வாய்ப்பை விட்டுற கூடாதுனு தயாரிப்பாளரிடம் விடைபெற்று கிளம்பினான் ராஜா.
.............................தொடரும்...............