எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குற்றங்கள் ----------------------- நாட்டில் குற்றங்கள் நாளும் பல வடிவங்களில்...

குற்றங்கள் 

-----------------------

நாட்டில் குற்றங்கள் நாளும் பல வடிவங்களில் நடைபெறுகிறது . இதனை நாளிதழ்கள் , தொலைக்காட்சிகள் மூலமாக அல்லது பலரும் கூறுவதை நாம் அறிகிறோம். நாளுக்குநாள் அவை பெருகி வருகின்றன என்பதை மறுக்க முடியாது . சில நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு இருப்பதையும் உணர முடிகிறது . 

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் பல இருந்தாலும் வறுமை மற்றும் பணத்தின் மீதுள்ள பேராசையும் முக்கியமாக கருதப்படுகிறது . குற்றம் செய்பவர்களை விட , அதற்கு உடந்தையாகசிலர் இருப்பது வியப்பாக உள்ளது .அவர்கள் தண்டனை பெறாது தப்பித்துக் கொள்ள ஒருசிலர் ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவது மிகவும் வருந்தத்தக்கது . 
அதுமட்டுமன்றி சில தொலைக்காட்சிகளில் நடந்த குற்றங்களை மக்கள் காண்பதற்கு , காட்சிகளாக சித்தரித்து ஒளிபரப்புவது வேடிக்கையாக இருக்கிறது . இதனால் மேலும் பலர் புதிதாக குற்றம் புரிவதற்கு வழி வகுக்கிறது என்பதை சிந்திப்பதே இல்லை . அந்த தொலைக்காட்சி நிறுவனங்களை கேட்டால் இதை காண்பதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக வாய்ப்பாக அமையும் என்று நியாயம் கற்பிப்பார்கள் .  அதுமட்டுமல்ல , இது போன்ற காட்சிகள் பல திரைப்படங்களில் வருகிறது என்றும் கூறுவது வாடிக்கையாகிவிட்டது .

எனக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் ஒரு அச்சத்தையும் , தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது .எனது தனிப்பட்டக் கருத்து இது. 

ஆகவே இந்த நிகழ்சசிக்களைத் தவிர்க்கலாம் . இது போன்று ஒளிபரப்புவதை 
தடுக்க அரசாங்கம் ஏதாவது ஒரு விதிமுறை அல்லது சட்டங்கள் மூலம் திருத்தம் கொண்டு வந்தால் நல்லது . பொதுமக்கள் நலன் கருதி இந்த வேண்டுகோளை முன்மொழிகிறேன், நாட்டின் சாதாரண குடிமகன் என்ற முறையில் .  


பழனி குமார் 
 
            




        




 



நாள் : 20-Sep-20, 6:58 am

மேலே