திருந்துவது எப்போது? படிப்பறிவில்லாத பாட்டன்முதல் பட்டம் பெற்ற இளைஞன்...
திருந்துவது எப்போது?
படிப்பறிவில்லாத பாட்டன்முதல்
பட்டம் பெற்ற இளைஞன் வரை
பெண் ஏனோ சன்மானம் வாங்கா
சமையல்காரியாகவும்
வேலையாயிரம் செயினும்
வேலையில்லா வெட்டிப் பெண்!
என்றெண்ணும் இச்சமூகம்
திருந்துவது எப்போது?
------------கா.கௌசல்யாதேவி