அரிதாரம் அவமானம் கொள்கையில் அன்பென்ற அரிதாரம். கவலை ஆட்கொண்ட...
அரிதாரம்
அவமானம் கொள்கையில்
அன்பென்ற அரிதாரம்.
கவலை ஆட்கொண்ட தருணத்தில் களிப்பென்ற அரிதாரம்.
வலி காணும் நேரமது
வலிமை அரிதாரம்
சினம் கொண்ட கணம்
சிரிப்பென்ற அரிதாரம்.
அரிதாரம் கொண்டார் அனைத்தும் பெற்றார்.
அரிதாரம் கொள்ளார்
அரியணை ஏறார்..😔😔😔😔.
--------கா.கௌ