வாழ்வின் நியதிகள் --------------------------------- உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தால் விண்ணில்...
வாழ்வின் நியதிகள்
---------------------------------
உச்சத்தில்
இருந்தால்
விண்ணில்
ஒளிரும்
நிலவும்
எட்டிப்பிடிக்கும்
தூரமாகத்
தெரியும்....
விரக்தியின்
விளிம்பில்
இருந்தால்
ஓரடிதள்ளி
நிற்கும்
ஒற்றை
மனிதனும்
ஓராயிரம்
உருவங்களாக
தோன்றும்...
உள்ளத்தில்
வலிமையும்
நெஞ்சில்
துணிவும்
இருந்தால்
எரிமலையும்
பனிமலையாக
தெரியும் ...
உள்ளத்தில்
உரமிருந்தால்
வருத்தத்தின்
வடிவமும்
வசந்தத்தின்
வருடலாக
தெரியும் ...
எதையும்
தாங்கிடும்
இதயம்
இருந்தால்
புயற்காற்றும்
இயற்கையின்
புன்னகையாக
தெரியும்... !
எதிர்நீச்சலிட
பழகிட்டால்
எதிர்த்துப்
போராடுபவர்
எவராயினும்
தனித்தேப்
போராட
களம்காண
முடியும்...
சிந்தனை
தெளிவானால்
சீர்மிகு எண்ணம்
மேலோங்கும் ..
அநீதிகளை
அழித்து
நீதியை
நிலைநாட்டும். !
பழனி குமார்