எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாயுள்ளத்தோடு சேவை புரியும் செவிலியர் சகோதரிகள் அனைவருக்கும் எனது...

தாயுள்ளத்தோடு சேவை புரியும் செவிலியர் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த" செவிலியர் தின" வாழ்த்துகள் !தற்போது நிலவும் இக்கட்டான சூழலிலும் வீட்டை மறந்து சமூகத்தின் நலன் கருதி தன்னலமற்று பணியாற்றும் உயர்ந்த பண்புள்ள செவிலியர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள், நன்றிகள். உண்மையில் இந்த கொரானா போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் தன்னுயிரை துச்சமெனக் கருதி , சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றும் முன்கள பணியாளர்கள் , செவிலியர்கள் , மருத்துவர்கள் , சாதிமதம் கடந்து மனித நேயத்துடன் சேவை புரியும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தலைவணங்கி வாழ்த்துக்கள் கூறுகிறேன் . பழனி குமார் 
நாள் : 12-May-21, 2:45 pm

மேலே