புது யுகம் நோக்கி. எம் புது யுகப் பயணமதில்...
புது யுகம் நோக்கி.
எம் புது யுகப் பயணமதில் பல பாரம்பரியங்களை பறிகொடுத்த மனிதன் இன்னல்களில் சிக்குண்டு சின்னாபின்னமாகிறான்.
ஓலைக்குடிசைதனில் கூட்டுக்குடும்பமாய் உலாவிய மனிதன் இன்று பெரும் மாடங்கள் அமைத்து தனிமையில் சிக்குண்டு தவிக்கிறான்.
இன்முக முகமன் கூறி உற்றாரை உபசரித்தவன் இன்று அன்னாந்து பார்க்க நோரமின்றி அலைபேசியில் அரட்டை அடிக்கிறான்.
பச்சைப்பசேலென புல்வெளி அமைத்து பல்லாயிரம் பச்சை மரங்கள் நட்ட மனிதன் காடுகள் முதலாய் கொண்டு எம் சுற்றத்தையும் சூரையாடி சுடுகாடாய் மாற்றி இயற்கை சுவசத்திற்க்கு திரை இட்டான்.
எம் தாகம் தீர்த்த மதுரமான நிலத்தடி நீரையும் கனிய வளமென ஊருஞ்சி நிக்கதி ஆக்கினான்.
பசுமை புரட்சி எனும் நாமம் சூட்டி அதிகளவு நச்சுகளை எம் பூ மாதாவில் புதைத்தான் மனிதன்.
தினமும் பொது நூலகங்களில் பத்திரிகை, கதை புத்தகங்கள் என வாசித்த பசுமையான நாட்க்கள் நவீனம் எனும் போர்வையில் எம்மிடம் பறிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களாக மாறியது.
தபால் காரனுக்காய் காத்திருந்த எம் குடி மக்கள் தபாலகத்தே மறந்து நிற்க்கின்றனர். எம் வளரும் சந்ததி கடிதங்களை காண்பதென்பதே அரிது.
மாலைப்பொழுதுகளில் பல மாய விளையாட்டுக்களை விளையாடிய நாங்கள் இன்று அலைபேசி விளையாட்டுக்களின் அடிமைகள்.
புது யுகம் நோக்கி பயணமதில் நான் கண்ட அத்தனையும் புதுமைகளே,எம் மகிழ்ச்சிகரமான வாழ்கைப்பயணத்தை அழித்தொழித்வைகளே .
இன்று நாம் எம் கலாச்சார விழுமியங்களை கூட மறந்து நிற்க்கதியாய் தவிக்கிறோம்.
புது யுகம் நோக்கிய எம் பயணம் வீழ்ச்சியே என்பேன்.
விளித்திடு மனிதா!
_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_