எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலையில் எழுகையில் கதிரவனை காண்கிறோம் கதிரவனை போல் ஒளி...

காலையில் எழுகையில் கதிரவனை காண்கிறோம் 

கதிரவனை போல் ஒளி தர மறக்கிறோம் 
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க காபி குடிக்கிறோம் 
காபி போல பிறருக்கு ஊக்கம் கொடுப்பதில்லை 
குளித்து வயிற்றுக்கு சிற்றுண்டி கொடுக்கிறோம் 
சிற்றுண்டிக்கு விடுமுறை கொடுப்பதிதில்லை 
மதியம் வயிற்றுக்கு வகையாக சாப்பிடுகிறோம் 
இன்னொருவர் வகையாக வாழ படுபடுவதில்லை 
மாலையில் தின்பண்டம் எடுத்து மீண்டும் காபி
பசியினாலா அல்லது பழக்கத்தினாலா, தெரியாது 
இரவில் மீண்டும் வயிற்றுக்கு கொஞ்சம் போடுகிறோம் 
வயிற்றுக்கு தேவையா எந்த அளவுக்கு தேவை தெரியாது 
காலை இரவு இரண்டுக்கும் நடுவில் ஏதோ உழல்கிறோம் 
நேற்றைக்கு இன்று நான் பக்குவமடைந்தேனோ தெரியாது 
அலுவலகதில் சேட்டை, நண்பர்களுடன் அரட்டை, வீட்டில் குறட்டை
இப்படியாக அனுதினமும் கடந்துகொண்டே போகிறது, என்ன லாபம்?
உடலும் உள்ளமும் அமைந்தது எதற்காக என்றே தெரியவில்லை?
உடலுக்கு என்றல் பசிக்க, பின் மசிக்க, தொடர்ந்து ருசித்து புசிக்க
உள்ளம் என்றால் ஏதாவது நடந்த பழையவைகளை அசைபோட 
இப்படி இருப்பின் எப்படி ஐயா மனிதனுக்கு முன்னேற்றம் வரவும் 
வயிற்று பானை முன்னேறலாம், நாம் எப்படி ஐயா முன்னேறுவோம்?
கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்க, நல்ல யோசித்து பாருங்க
தீர உங்களையே விசாரணை செய்து பாருங்க, நல்ல தெரியும் 
பிறகு நாம் வாழும் ஒவ்வொரு நாளும் உபயோகமாக இருக்கும்
நமக்குள் சாதாரண இன்பம் இல்லாமல் உண்மை மகிழ்ச்சி இருக்கும்    
  
  


பதிவு : Ramasubramanian
நாள் : 27-Nov-21, 2:47 pm

மேலே