எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதின் எதிரொலி - 4 --------------------------------------------------------------- கடந்த காலத்தில்...

  மனதின் எதிரொலி - 4 

---------------------------------------------------------------


கடந்த காலத்தில் மட்டுமல்ல , தற்போதுள்ள நவீன காலத்திலும் சாதி மதங்களைத் தவிர ஒரு பொதுவான பிரிவினை சமுதாயத்தில் எப்போதும் உண்டு . இந்த பிளவு இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் இது நிச்சயம் இருக்கும் என்றே நினைக்கிறேன் . அதாவது ஒரு பிரிவு " இருப்பவன் " மற்றொரு பிரிவு " இல்லாதவன் " , (அல்லது) " ஏழை " , " பணக்காரன் " என்பது தான் அது . உலகில் எங்கும் உள்ளது இந்த பாகுபாடு. இது நிலைத்திருப்பது ஏன் ..? மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர் என்பதைப் பொறுத்தே இந்த அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று . 

இதில் மட்டும் சாதி மதம் கிடையாது. ஏழ்மை எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி தவிக்கும் அடித்தட்டு மக்கள் நாளும் அன்றாட வாழ்விற்கு எந்த அளவுக்கு சிரமத்திற்கு ஆளாகி அவதிப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இதிலிருந்து மிக மிக சிலரே தப்பித்து தங்களது நிலை மாற முடிகிறது. எல்லோரும் எப்போதும் அவர்களுக்கு உதவ முடியாது என்பது யதார்த்தம். அதிகம் வசதி படைத்தவர்களில் ஒரு சிலர் உதவ முன் வருகின்றனர். நடுத்தர மக்கள் பார்த்து நம்மால் உதவ முடியவில்லை என்று ஏங்கித் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கொடையுள்ளம் கொண்டவர்கள் தம்மால் இயன்றவரை உதவிகள் செய்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. உடனடியாக இதற்கு எந்த அரசாங்கமும் தீர்வு காண முடியாது. அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. 
இதனால் சமூகத்தில் பல தவறுகள் நடக்கிறது. எப்போது தான் இந்த நிலை மாறும் ?


இந்த கேள்வி என் மனதில் நிரந்தரமாக எதிரொலிக்கிறது. அனைவருக்கும் கட்டளையல்ல, எனது தாழ்மையான வேண்டுகோள். அவரவர் தங்கள் நிலைக்கு ஏற்ப ஏழைகளுக்கு உதவுங்கள். 


பழனி குமார் 
    12.12.2021

நாள் : 20-Dec-21, 9:35 pm

மேலே