எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதின் எதிரொலி - 5 -------------------------------------- சில நேரங்களில்...

  மனதின் எதிரொலி - 5 

--------------------------------------

சில நேரங்களில் நமது மனங்களில் நினைவுகள் பின்னோக்கி செல்லும். வாழ்க்கையில் முடிந்துவிட்ட நிகழ்வுகள், கடந்து வந்த நாட்கள் சிந்தையில் தோன்றி மறையும். அத்துடன் இணைந்து, மறைந்த பலரின் முகங்களும் அவர்கள் கூறிய வார்த்தைகள், உரையாடல்கள் சிலவற்றை ஞாபகப்படுத்தும். எனக்கு இது போன்ற அனுபவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நமது சிந்தனைகள் திசை மாறும். அவர்கள் கூறியது சில தவறாகத் தோன்றும். சில சரியாக நியாயமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் ஏன் காலம் கடந்து நினைக்கிறோம் , அலசுகிறோம் என்று தெரியவில்லை. 


அவர்கள் கூறியதில் நல்லவற்றை நாம் ஏன் கேட்டும் அறிவுரையாக ஏற்று செயல்படவில்லை என்று இப்போது வருந்துவதும் எதற்காக என்றும் புரியவில்லை. அதன் விளைவுகளை நாம் இன்று சந்தித்து வேதனை அடைவதும் விசித்திரமான ஒன்று . இதனால் எந்தவித பயனும் இல்லை என்று அறிந்தும் இது நிகழ்வது இயற்கை நமக்கு அளிக்கும் தண்டனை என்று நினைக்கிறேன். இந்த வினாவும் விடையும் எனது மனதில் தொடர்ந்து எதிரொலிக்கிறது. 


பழனி குமார் 
 20.12.2021

நாள் : 20-Dec-21, 9:44 pm

மேலே