கவிதை பயணம் ...... முகயிதழ் தழுவும் விரல்என வருடும்...
கவிதை பயணம் ......
முகயிதழ் தழுவும் விரல்என வருடும் முதலில்
கல் சிகள் வருடும் நகம்என நெருடும் முடிவில்.....என் கவிதை பயணம்
மனிதம் பிளவுபட மதம்
இவன் பிரிந்துபோக இறைவன்
கட்டிப்போட கட்டுப்பாடுகள்
பிறரைச்சாரா கலாச்சாரம்
அன்பை அழிக்கும் பண்பாடு
ஒற்றுமையை எரிக்க சாதீ
நட்பை முறிக்கும் நாகரிகம்..
இவற்றிற்கிடையில்
இனிமையாய் தொடங்கிய என் கவிதை பயணம்
இத்தனையும் கடக்கும்போது வன்முறையாய் மாறிப்போகிறது...
மென்மை திளைக்கும் பூந்தமிழில்
வன்மை நிறைந்த வார்த்தைகளும் உண்டு ....