எழுந்து வா வீழ்ந்து கிடந்தால் வெற்றிகள் கிட்டாது/ எழுந்து...
எழுந்து வா
வீழ்ந்து கிடந்தால்
வெற்றிகள் கிட்டாது/
எழுந்து வந்திடு ஏற்றங்கள் கண்டிடலாம்/
சோதனைகள் வேதனைகள் தரும்/
துவளாதே மனமே
துணிந்து வா/
முயன்றும் முடியவில்லை
என்றால்
முயற்சியை இன்னும் இரட்டிப்பாக்கு/
காலம் கனிகையில்
சுவைத்திடலாம் வெற்றிக் கனிகளை/
துவளாது எழுந்து வா நீ/
ஏளனமாய் சிரிக்கும் முகங்களுக்கு முன்
எட்டி நடை போட்டு
வெற்றிக் கொடி நாட்டு/
ஓயாது மோதும் அலையாய்
ஓயாது இரு/
கொட்டும் அருவி வீழ்ந்தாலும்
வழியெடுத்து ஓடும் நதியாய்
நீயும் புது வழிகள் அறிந்து முயற்சிகள் போட்டு முன்னேறு/
எழுந்து வா துணிந்து வா
இலக்குகள் அத்தனையும்
அடைந்திடலாம் முன்னே வா
இவள்
எண்ணங்களின் எழுத்துக்கள்
அறூபா அஹ்லா